குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள தபோய் என்ற பகுதியில் சாலைகள் படு கேவலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வாகனங்களை ஒட்டுவதற்கே தனி திறமை வேண்டும். அந்த வகையில், இந்த சாலையில் ஒரு இளைஞர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். bike accident video viral
அப்போது, எதிர்புறத்தில் நான்கு சக்கர வாகனம் ஒன்று சென்றது. அந்த காருக்கு வழி விட இளைஞர் பைக்கை வளைத்த போது, அது அங்கிருந்த குழியில் சிக்கி கவிழ்ந்தது . பைக்கில் இருந்த இளைஞர் அருகில் இருந்த மற்றொரு குழியில் தலைகுப்புற விழுந்தார். bike accident video viral
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பதைபதைப்புடன் ஓடி வந்து இளைஞரை குழியில் இருந்து மீட்டனர். பின்னர், அவரை ஆசுவாசப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது பைக்கும் மீட்கப்பட்டது.
திறந்திருந்த குழிக்கு சரியான தடுப்புகள் அமைக்காமல் விட்டதே விபத்துக்கு காரணம் என உள்ளூர் நிர்வாகத்தை அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பான வீடியோவை டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்ததும் இதுதான் குஜராத் மாடல் நிர்வாகம் என்று இணையத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.bike accident video viral
இதுபோன்ற நிகழ்வுக்கு அங்குள்ள அரசாங்கம் தான் 100 சதவிகிதம் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த குஜராத் மாநிலத்தை வைத்து தானே இந்தியா முழுக்க குஜராத் மாடல் குஜராத் மாடல் என்று சொல்லுகிறார்கள் என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.bike accident video viral
கடந்த 24 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை பாரதிய ஜனதா கட்சிதானே ஆட்சி செய்து வருகிறது. நல்ல சாதனை… அருமையான உள் கட்டமைப்பு என்று மற்றொருவர் கேள்வி கேட்டுள்ளார். bike accident video viral