ADVERTISEMENT

பீகார்: தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக குறைவான முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள்

Published On:

| By Mathi

Bihar Muslim MLAs

பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இம்முறைதான் மிக குறைவான எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் மொத்த மக்கள் தொகையில் 17.7% பேர் உள்ளனர். பீகாரில் 1952 முதல் 2020-ம் ஆண்டு வரை ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் 15 முதல் அதிகபட்சமாக 34 எம்.எல்.ஏ.க்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

2020-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 19 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் பீகார் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர்.

ஆனால் இந்த முறை வரலாற்றிலேயே மிக குறைவாக 11 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் மட்டுமே சட்டமன்றத்துக்கு செல்கின்றனர்.

ADVERTISEMENT

ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மொத்தம் 23 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. இவர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர்.

ஆர்ஜேடி 18 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; இவர்களில் 3 பேர் வெற்றி பெற்றனர்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி 10 முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தியது; ஆனால் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

ஜேடியூ 4 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.

பாஜக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை.

1952 முதல் 2020 வரை பீகார் சட்டப்பேரவையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை

ஆண்டு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை
195224
195725
196221
196718
196919
197225
197725
198028
198534
199020
199519
200029
200516
201019
201524
202019

2025 பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்

வரிசைவேட்பாளர் பெயர்வெற்றி பெற்ற தொகுதிகட்சி பெயர்
1ஜாமா கான்சைன்பூர்ஜேடியூ
2ஃபைசல் ரஹ்மான்டாக்காஆர்ஜேடி
3அசிப் அஹமதுபிஸ்ஃபிஆர்ஜேடி
4ஒசாமா ஷஹாப்ரகுநாத்பூர்ஆர்ஜேடி
5அபிதூர் ரஹ்மான்அரரியாகாங்கிரஸ்
6மொஹத் கம்ருல் ஹோடாகிஷன்கஞ்ச்காங்கிரஸ்
7முர்ஷித் ஆலம்ஜோகிஹாட்ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
8தௌசீஃப் ஆலம்பகதுர்கஞ்ச்ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
9சர்வர் ஆலம்கோச்சாதாமன்ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
10அக்தருல் இமான்ஆமூர்ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
11குலாம் சர்வர்பிஸ்ஃபிஓவைசியின் மஜ்லிஸ் கட்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share