ADVERTISEMENT

நம்பிக்கை வாக்கெடுப்பு: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வெற்றி!

Published On:

| By Jegadeesh

பிகார் மாநில சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 24 ) முதல் அமைச்சர் நிதிஷ்குமாரின் அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து விலகி முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

பின்னர் அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல் அமைச்சரானார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று (ஆகஸ்ட் 24 ) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிகார் சட்டசபை இன்று காலை கூடிய போது சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமானது.

ADVERTISEMENT
Bihar Chief Minister

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 24 ) பிற்பகல் மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீது முதல் அமைச்சர் நிதிஷ்குமார் உரையாற்றி, சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிகார் சட்டசபையில் மொத்தமுள்ள 243 சட்டசபை உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 122 வாக்குகளே பொதுமானதாக இருந்த நிலையில் 164 சட்டசபை உறுப்பினர்களில் வாக்குகளை பெற்ற நிதிஷ் குமார் தலைமையிலான ’மகாபந்தன் கூட்டணி’ வெற்றி பெற்றது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நிதிஷ்குமார் அரசு மீது வாக்கெடுப்பு: கூட்டணி கட்சியினர் வீடுகளில் ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share