பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு!

Published On:

| By Selvam

bihar caste census

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில அரசு இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளது.

பிகார் சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். பிகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதால் கணக்கெடுப்பு நடத்த முட்டுக்கட்டை ஏற்பட்டது.

ADVERTISEMENT

எனினும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில்,  அதற்கான பணிகளை மாநில அரசு இந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 16-ஆம் தேதி நிறைவு செய்தது.

இந்தநிலையில் காந்தி ஜெயந்தியான இன்று பிகார் மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, “பிகார் மாநிலத்தில் 13 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பொதுப்பிரிவினர் 15.52 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் 27.13 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.04 சதவிகிதம், பட்டியல் வகுப்பினர் 19 சதவிகிதம், பழங்குடியினர் 1.68 சதவிகிதம்” என்ற விவரங்களை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் விவேக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த விவரங்களை வெளியிட்ட பின்னர் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கதில், “காந்தி ஜெயந்தியான இன்று வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் உள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியதால் சாதிகளை மட்டும் அடையாளம் காணாமல் ஒவ்வொருவரின் பொருளாதார சூழலும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அனைத்து பிரிவினரின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கிராமங்கள் தன்னிறைவு பெற திமுக அரசு உழைக்கும்” – ஸ்டாலின்

தளபதி 68 அப்டேட் : விஜய்க்கு ஜோடி இவரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share