சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்

Published On:

| By Jegadeesh

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இன்று (ஜனவரி 7 ) முதல் முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பீகாரில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அனுமதி கோரும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. அமைச்சரவையில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று (ஜனவரி 7) முதல் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுகள் என ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் 2-வது மாநிலம் பீகார்.

ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை.

எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன.

மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.

பீகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று (ஜனவரி 7 ) தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன.

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செம்மரக் கடத்தல் வழக்கு: சசிகலா உறவினர் கைது!

செவிலியர்களை போராடத் தூண்டுகின்றனர் : அமைச்சர் மா.சு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share