பிக்பாஸ் வீட்டின் 36ஆம் நாள் ஒருபக்கம் பாடலுடன் ஆட்டம் துவங்க, மறுபக்கம் விசித்ரா, கூல் சுரேஷ் இருவரும் பிரதீப் வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து வருத்தமாக பேசிக்கொண்டிருக்க காலை விடிந்தது. Biggbosstamil7 what happened day 36
பிக்பாஸ் உத்தரவின் பேரில் விசித்ரா, கூல் சுரேஷ், தினேஷ், விஜே அர்ச்சனா உள்ளிட்ட 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் இந்த வார கேப்டன் மாயா. தொடர்ந்து வீட்டுக்கான வேலைகளை செய்ய ஆள் பிரித்து விட்டார்.
பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை திங்கட்கிழமை என்றாலே ஆப்பு காத்திருக்கிறது என்று தான் அர்த்தம் போல.. வழக்கமாக தொடங்கிய நாமினேஷனில் இந்த முறை தினேஷ், விசித்ரா, ஐஸ்வர்யா, பூர்ணிமா, விஜே அர்ச்சனா மற்றும் ஆர்ஜே பிராவோ அதிக வாக்குகளை பெற்றனர். அதிகமான ஹவுஸ்மேட்ஸ் தினேஷ், விசித்ராவை நாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத பெஸ்ட் எபிசோடு என நேற்றைய நாளை சொல்லலாம். ஒரே நாள்ல இவ்வளவு கண்டெண்ட் கெடைச்சா நான் என்ன பண்றது என பிக்பாஸ் எடிட்டர்கள் திணறி போகும் அளவுக்கு நேற்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டெண்ட் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
குறிப்பாக அழுகை மூஞ்சி என முத்திரை குத்தப்பட்ட விஜே அர்ச்சனா நேற்று ஐஷு, மாயா,பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன் என அனைவரையும் வச்சு செய்தார்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து நேற்று அனைவரும் பேசிய நிலையில், “அவன் செய்தது எனக்கும் பிடிக்கவில்லை ஆனால் பாதுகாப்பு இல்லை என்று கூறி அவனை வெளியே அனுப்பியது சரியில்லை” என்று விசித்ரா, தினேஷ், விஜே அர்ச்சனா பாயிண்ட் பிடித்து பேசினர்.
இதற்கிடையே ‘நீயெல்லாம் ஒரு ஆளே கெடையாது’ என நிக்ஸன், தினேஷை பார்த்து கேட்க அவர்கள் இருவருக்கும் முட்டிக்கொண்டது.

தினேஷிடம் சண்டை போட்டு அடுத்ததாக அர்ச்சனாவிடம் வந்தார் நிக்ஸன். ஏற்கெனவே ஃபயர் மோடில் இருந்த அர்ச்சனாவோ, “ஐஷு கூட தானே நீங்க சுத்திட்டு இருக்கீங்க.. அப்போ பிரதீப் பத்தி ஐஷு சொன்னதுக்கு நீங்க அவன் சட்டையை பிடிச்சு கேட்டு இருக்கணும். அப்போ ஏன் நீங்க ரியாக்ட் பண்ணல’ என்று கேட்க… வாண்டட்டாக வந்து மூக்கை உடைச்சுக்கிட்ட நிக்ஸன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டார்.
சைடு கேப்புல தினேஷூடன் மோதிக்கொண்ட மாயா தன்னுடைய ஆதரவாளர்களிடம், ’நம்மை கடுப்பேற்றும் தினேஷ், விசித்ரா, அர்ச்சனா என மூன்று பேரையும் இந்த வாரம் வெளியே அனுப்ப வேண்டும்’ என்று சபதம் போட்டார். நாமினேஷன் பத்தி ஓபனா பேசக்கூடாது என கமல் சொல்லி ஒருநாள் கூட ஆகல… அதை கேப்டனே மீறியது அபத்தம் தானே.
இதை கவனித்த அர்ச்சனா, “உனக்கு கொடுத்த ஒரே வேலை கேப்டன் அதையும் மத்தவங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டு சுத்திட்டு இருக்கீங்க..” என மாயாவிடம் கேள்வி கேட்க மீண்டும் வீட்டுக்குள் களேபரம்.

இன்னைக்கு கண்டெண்ட்ல இன்னும் ரவீனா, வெளியேறிய பிரதீப் குறித்து விசித்ராவிடம் புகார் கொடுக்க.. “இதெல்லாம் நீ உடனே போய் சொல்லணும் ஒரு வாரம் கழிச்சு சொல்ல கூடாது. உன்ன யாராவது ரேப் பண்ணிட்டா ஒரு வாரம் கழிச்சு போய் சொல்லுவியா?” என்று விசித்ரா திருப்பி கேட்டார்.
அவ்வளவு தான்.. ரவீனா இதை உடனே மாயாவிடம் ஓடிப்போய் சொல்ல, கேமரா முன்னால் வந்த மாயா, “பிக்பாஸ் வீட்டுல பொண்ணுங்களுக்கு பிரச்சினை இருக்கு. தினேஷ், விசித்ரா, அர்ச்சனா மூவரும் தான் அதற்கு காரணம் ரேப் உள்ளிட்ட வார்த்தைகளை சகஜமாக பயன்படுத்துகின்றனர்” என்று குற்றச்சாட்டை கூறினார்.
இதையெல்லாம் கமல் பாத்துக்குடுவாறு என்று கண்டுக்காத பிக்பாஸ், ’எல்லோரும் ஷாப்பிங் செய்ய வாங்க’ என பிக்பாஸ் அன்பாக அழைத்தார்.
இதில் ஸ்மால் பாஸ் வீட்டின் சார்பாக அர்ச்சனாவை அனுப்பினார் விசித்ரா, பலரும் எச்சரித்தபடியே உள்ளே சென்ற இருவரும் எண்ணெய் பாக்கெட்டை மறந்த நிலையில், ஒரு வாரம் எப்படி சமைக்கிறது என அர்ச்சனா, விசித்ரா மீதும் பாய்ந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

இந்த குதறல் ஓய்ந்த நிலையில் ஒரு மூலையில் உக்கார்ந்து ‘எல்லோரும். நீ இடம் கொடுக்காம எப்படி பிரதீப் பேசினான்? என்று கேள்வி கேட்குறாங்க இதை என்னுடைய பெற்றோர்கள் பார்த்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்று ரொம்ப லேட்டா பீல் செய்து கொண்டிருந்த ஐஸுக்கு ஆறுதல் சொல்வதற்காக அர்ச்சனா சென்றார். ஆனா அதுவும் பிரச்ச்னையில் போய் முடிந்தது.
ஆக மொத்தம் மாயா, ஐஷு, பூர்ணிமா, ஜோவிகா என ஒரு கூட்டமே நேற்று அர்ச்சனாவை டார்கெட் செய்வது தெளிவாக தெரிந்தது.. என்னதான் அவர் சரியான பதிலடி கொடுத்தாலும் அவர் டயர்டானது அப்பட்டமா தெரியுது.

அதனால் விரைவிலேயே மறுபடியும் அர்ச்சனா வீட்டுக்கு போகணும் என்று அழுதாலும் கூட ஆச்சரியமில்லை. இப்போதைக்கு விசித்ரா கூட இருக்குறது தான் அர்ச்சனாவுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்.
இருவருக்கும் எதிராக மாயா, ஐஷு, பூர்ணிமா, ஜோவிகா என பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதே நேற்றைய எபிசோடில் நடந்த கலவரங்கள் காட்டியது. இதையெல்லாம் இருவரும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தான் இந்த வாரத்தில் பெரிய டாஸ்க்காக இருக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்! Biggbosstamil7 what happened day 36
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
2025 சாம்பியன்ஸ் ட்ரோபியில் ஆப்கான்… உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லுமா?
கமல் படத்திற்கு டிரெண்டிங் டைட்டில்: ’தக் லைஃப்’ அர்த்தம் என்ன?
