பிக்பாஸ் வீட்டின் 43-ம் நாள் காலையில் போட்ட மதுர குலுங்க பாட்டு முடிந்ததும் போட்டியாளர்களை அழைத்த பிக்பாஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை சொல்லி, ’இனிமே பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என தனித்தனி வீடுகள் கிடையாது, எல்லாருமே ஒண்ணு தான்’ என ஒற்றுமையை நிலை நாட்டினார். Biggbosstamil7 Diwali Special
அவரின் இந்த அறிவிப்பை கேட்டு கேப்டன் தினேஷ் முகத்தில் ஆனந்த கண்ணீரும், மாயா மற்றும் பூர்ணிமா முகத்தில் எள்ளும் கொள்ளும் ஒரு சேர வெடித்தன. தொடர்ந்து ஸ்மால் பாஸ் குரல் வீட்டுக்குள் ஒலித்தது. விச்சு நல்லா இருக்கீங்களா என ஸ்மால் பாஸ் கேட்க, நீங்க நல்லா இருக்கீங்களா என பதிலுக்கு உருகினார் விசித்ரா. நடுவில் புகுந்த பிக்பாஸ் ’தினேஷ், இந்த ஆளு ஓவரா பேசுறாரு நாம வேலையை பாப்போம்’ என காலை வாரினார். (பிக்பாஸ் காமெடி எல்லாம் பண்றாரு)
தொடர்ந்து முந்தைய சீசன்கள் போலவே சமைக்க, பாத்திரம் கழுவ, வீடு சுத்தம் செய்ய போன்றவற்றுக்கு ஆட்களை பிரிக்கும்படி தினேஷுக்கு, பிக்பாஸ் உத்தரவிட்டார். அதோடு ’டீ, காபி மட்டும் செஞ்சுக்கங்க. காலை, மதியம் , இரவு மூணு வேளைக்கும் நான் டிரீட் தருகிறேன் என போட்டியாளர்களின் மனதில் பால் வார்த்தார்.
இதையடுத்து ஒவ்வொரு டீமுக்கும் ஆட்கள் பிரிக்கப்பட்டனர். சமைக்கும் அணியில் நிக்ஸன், விஷ்ணு, ஆர்ஜே பிராவோ, ஜோவிகா இடம் பெற்றனர். கானா பாலா, விசித்ரா, அக்ஷயா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் வீடு சுத்தம் செய்யும் அணியில் இடம் பெற்றனர். பாத்ரூம் கழுவும் அணியில் கூல் சுரேஷ், அர்ச்சனா, மணி இடம் பெற்றனர். பாத்திரம் கழுவும் அணியில் மாயா, பூர்ணிமா இடம் பெற்றனர்.
வேலைகள் ஒரு பக்கம் நடந்தாலும் மாயா, பூர்ணிமா வழக்கம்போல தங்கள் வேலையை (புறணி பேச) செய்ய ஆரம்பித்தனர். அவங்கள மாதிரி என்னாலயும் விளையாட முடியும் ஆனா நான் செய்ய மாட்டேன் என பூர்ணிமா விளக்கம் அளித்தார். மேலும் பாத்ரூமில் அர்ச்சனா கட்டியணைத்து தன்னிடம் லவ் யூ சொன்னதை மிகவும் மோசமான தொனியில் மாயாவிடம் சொல்லி கொண்டிருந்தார்.
பெரிய வாய்ப்பு தான் எப்படி இங்க விளையாட முடியும் என ஆதங்கமாக பேசிய பூர்ணிமா கடைசியில் அழுகையில் முடித்தார். ஒரு பக்கம் இவர்கள் அழுதாலும் மறுபக்கம் தீபாவளி டிரெஸ், அனைவரும் ஷாப்பிங் செல்லலாம் என பிக்பாஸ் ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி கொண்டிருந்தார்.
தீபாவளி புத்தாடைகள் அணிந்து போட்டியாளர்கள் மீண்டும் புறணி பேச ஆரம்பித்தனர். கூல் சுரேஷ், ரவீனா, மணி, தினேஷ் உள்ளிட்டோர் நிக்ஸன் குறித்து கருத்துக்களை பரிமாறி கொண்டனர். காதல் ஜெயிக்குமா? இல்லை அழியுமா? என சுரேஷ் பட்டிமன்றம் நடத்த அது காதலே கிடையாது நீங்க வேற என ஒரேயடியாக முடித்து விட்டார் தினேஷ்.
தீபாவளி சிறப்பு விருந்தினர்களாக புகழ், சிருஷ்டி உள்ளே வந்தனர். ஒவ்வொரு போட்டியாளர் வீட்டிலும் இருந்து உணவு பொருள்களுடன் வந்ததால் விருந்தினர்களுக்கு வீட்டிற்குள் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின் வீட்டு உணவு கிடைத்ததால் போட்டியாளர்கள் ஆனந்த கண்ணீருடன் உணவுகளை சாப்பிட்டனர்.
வீட்டுக்குள் புகழின் பேச்சைக்கேட்ட பிக்பாஸ் ’சூட்கேஸ் அனுப்புறேன், இந்த வீட்டுக்குள்ள இருக்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு’ என பங்கம் செய்தார். தீபாவளி என்றாலும் கண்டெண்ட் முக்கியம் என நினைத்த பிக்பாஸ் ‘கொளுத்தி போடு பட்டாச’ என டாஸ்க் ஒன்றை வைத்து பட்டாசுகளின் குணங்கள் யாருக்கு இருக்கிறது என போட்டியாளர்கள் பொதுவில் சொல்ல வேண்டும் என்று வில்லங்கமாக அறிவித்தார்.
இதில் சுரேஷுக்கு பாம்பு மாத்திரை, அர்ச்சனாவுக்கு சங்கு சக்கரம் மற்றும் பட்டர்பிளை, மாயாவுக்கு அணுகுண்டு, அக்ஷயாவுக்கு புஸ்வாணம், சரவண விக்ரமுக்கு சாட்டை மத்தாப்பு, விஷ்ணுவுக்கு சாட்டை வெடி, நிக்சனுக்கு கம்பி மத்தாப்பு, ஆர்ஜே பிராவோவுக்கு பென்சில் வெடி, பூர்ணிமாவுக்கு புல்லட் பாம், விசித்ராவுக்கு பெரிய புல்லட் மற்றும் வெங்காய வெடி, ஜோவிகாவுக்கு ராக்கெட் வெடி, மணிக்கு பொட்டு வெடி கிடைத்தது.
தொடர்ந்து மத்தாப்புகள் கொளுத்தி ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடினர். இதற்கு நடுவிலும் மாயா, பூர்ணிமா ஓரமாக அமர்ந்து புறணி பேசிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
நம்ம ஸ்கோர் பண்ணா கானா பாலாவுக்கு புடிக்காது என சுரேஷ் தன்னுடைய கண்டுபிடிப்பை மணி, விசித்ராவிடம் சொல்லி கொண்டிருந்தார். காலையில இருந்து நல்லா போச்சுல என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய பிக்பாஸ் இப்போ தான் எனக்கு ஒரிஜினல் தீபாவளி ஸ்டார்ட் என்று நாமினேஷன் சடங்கை ஆரம்பித்து வைத்தார்.
இதில் கானா பாலா, சரவண விக்ரம், விசித்ரா, ஆர்ஜே பிராவோ, மணி சந்திரா, பூர்ணிமா, ரவீனா, அக்ஷயா இடம் பிடித்தனர். ஆச்சரியமாக மாயா இதில் எஸ்கேப் ஆகி விட்டார். இதோட என்னோட கடமை முடிந்தது என்று பிக்பாஸ் விடை பெற்றார். போட்டியாளர்கள் இரவு உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
இரண்டு நாட்களாக சற்று ஓய்ந்து கிடந்த பிக்பாஸ் வீடு நாமிநேஷனை முன்னிட்டு மீண்டும் பற்றிக்கொண்டுள்ளது. இதனால் இந்த வாரம் யார் யாருடன் மோதிக்கொள்ள போகிறார்கள் என்பதை காத்திருந்து பார்க்கலாம். Biggbosstamil7 Diwali Special
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா