பிக் பாஸ் சீசன் – 7: விஷ்ணுவிற்கு தரப்படுமா ரெட் கார்டு?

Published On:

| By christopher

Biggboss7: will vishnu get a red card?

இது பிக் பாஸ் வீடா, அல்லது செம்மொழி பூங்காவா என நாமே குழம்புவதுபோல் இருந்தது இன்றைய எபிசோட். அந்த அளவிற்கு பல ஜோடியாக பிரிந்து பேசும் ஹவுஸ்மேட்ஸ்களைக் காண முடிந்தது.

இருந்தாலும், இன்றைய எபிசோடின் இறுதியில் பெரிய கைகலப்பு ஆகும் அளவிற்கு சலசலப்பு நிகழ்ந்தது.

ADVERTISEMENT

அந்த ‘ரெட் கார்டு’, ‘குறும்படம்’ போன்ற விஷயங்கள் எல்லாம் அரங்கேறும் நேரம் வந்துவிட்டது போலும். அதுக்கு முன்பு இன்றைய எபிசோடின் தொடக்கத்திற்கு வருவோம்.

‘நம்மல யாராச்சும் தப்பா நினைச்சிட்டா என்ன பண்றது..?’ என நிக்‌ஷன் அயிஷுவிடம் கேட்பதாய் தொடங்குகியது இன்றைய எபிசோட்.

ADVERTISEMENT

‘நினைக்காட்டியும் நீ நினைக்க வைப்ப போலயே டா’ என்பது போல் அதற்கு ரியாக்ட் செய்தார் ஐஷூ.

Biggboss7: will vishnu get a red card?

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அதைத் தொடர்ந்து ரவீனாவிடம் தன்னையும் ஐஷுவையும் சேர்த்து வைத்து பேச வேண்டாம் என நிக்‌ஷன் கேட்டுக்கொள்ள,

‘அப்போ எங்கள பேசுறப்போ மட்டும் நல்லா இருந்துச்சா.., நான் நிச்சயம் பேசுவேன்’ என்றார் ரவீனா. அடுத்த நாள் வேக்கப் பாடல் ஒலித்து முடிய, ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸுக்கு சீருடை வழங்கப்பட்டது.

இந்த வார ஷாப்பிங் கடனிற்கான முதல் டாஸ்கை பிக் பாஸ் அறிவித்தார். மேலும், அதில் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் ஒருவரின் உதவியுடன் ஆட வேண்டும் என சொல்ல,

‘போன வாரம் நான் பண்ண தப்ப இந்த வாரம் சரி செஞ்சிக்கிறேன்’ என ஸ்மால் பாஸ் ஹவுஸிலிருந்து யுகேந்திரன் பரிகாரம் கேட்க, சம்மதித்தார் இந்த வார கேப்டன் பூர்ணிமா.

கடினமான அந்த டாஸ்கில் ஜெயிக்க முடியாமல் போகினும், மாயா – யுகேந்திரனின் கடின முயற்சியை பாராட்டி 4 பேரின் ஆடைகளை மட்டும் பறிமுதல் செய்தார் பிக் பாஸ்.

Biggboss7: will vishnu get a red card?

அடுத்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது டாஸ்கான ‘போன் சார்ஜிங்’ டாஸ்கில் தான் ரசிக்க முடியாத சில சலசலப்புகள் நடந்தேறின. நிச்சயம் மணி, ரவீனா வென்று விடக் கூடாது என்கிற வன்மத்தில் மாயாவும் பூர்ணிமாவும் ஆடினர்.

மறுபக்கம் கடைசி ரவுண்டு வரை நீடித்து வந்தார் அக்‌ஷயா. டாஸ்கில் தானே தடுக்கி விழுந்த விஷ்ணு,

‘நீ தானடி என்ன தள்ளி விட்ட. நீ எப்படி இந்த டாஸ்க்க ஜெயிக்கிறன்னு பார்க்குறேன் டி’ என வார்த்தைகள் விட்டது மட்டுமின்றி, அக்‌ஷயாவின் கையிலே அடிக்கவும் செய்தார்.

Biggboss7: will vishnu get a red card?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

நிஜத்தில் எந்த தப்பும் செய்யாத அக்‌ஷயாவிற்கு துணையாய் எந்தக் குரலும் எழவில்லை என்பதே ஆச்சர்யம்.

ஆனால், இதுகுறித்து இந்த வாரம் கமல் சார் பேசுவார். விஷ்ணுவிற்கு ரெட் கார்டு, அல்லது நிஜமாகவே யார் அவரை தள்ளி விட்டார் என்பதற்கான குறும்படம் கூட போட்டுக் காட்டப்படலாம்.

இருப்பினும், தான் செய்ய முயன்ற வன்முறைக்கு துளியும் வருந்தாத விஷ்ணு அதை நியாயப்படுத்தியபடியே இருந்தார்.

ஷா

லியோ பாடல் காப்பியா? மீண்டும் சர்ச்சையில் அனிருத்

ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் பற்றி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share