பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Published On:

| By christopher

biggboss tharshan arrested and fir under 3 section

கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷனை போலீசார் இன்று (ஏப்ரல் 4) கைது செய்துள்ளனர். biggboss tharshan arrested and fir under 3 section

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் நேற்று மாலை ஜிம்முக்கு சென்று வீட்டுக்கு திரும்பியபோது, அவர் வீட்டு முன்பு வேறொரு கார் நின்றுள்ளது.

காரை அங்கிருந்து எடுக்கக் கூறியபோது, அவருக்கும், கார் உரிமையாளரான உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இருதரப்பினரும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் கொடுத்தனர்.

biggboss dharshan complaint against judge son

இதற்கிடையே தர்ஷன் தாக்கியதில் தாங்கள் காயமுற்றதாக கூறி, நீதிபதியின் மகன் ஆதிசூடி மற்றும் அவரது மாமியார் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரித்து வந்த போலீசார், நீதிபதியின் மகன் ஆதிசூடி, அவரது மனைவி மற்றும் மாமியார் மகேஸ்வரி தாக்கப்பட்டதாக கூறி நடிகர் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இருவர் மீதும் பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று தர்ஷன் அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல், காயப்படுத்துதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் ஆதிசூடி, அவரது மனைவி மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share