சின்னத்திரையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், பட வேலைகள் இருப்பதாக ஒதுங்கிக்கொள்ள, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசனை நடத்த போகிறார்.
அக்டோபர் 6 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாக பங்குபெற்றவர்களை அழைத்து விஜய் டிவி பேச வைத்திருக்கிறது. அதில் தாமரை உட்பட பலர் பேசும் வீடியோ தற்போது புரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வெளியான மற்றொரு ப்ரோமோவில் பிக்பாஸில் இந்த சீசனுக்கான வீட்டை விஜய் சேதுபதி சுற்றி காட்டியுள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதியான நாளை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.
தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் இயக்குநருமான கவுண்டம்பாளையம் ரஞ்சித், செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஆகியோரையும் எதிர்பார்க்கலாம்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வந்த நடிகர் தீபக், டான்சர் கோகுல்நாத், கானா பாடகர் பால் டப்பா, நடிகர் விஜே விஷால், சந்தோஷ் பிரதாப், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, விஜய் டிவி தொகுப்பாளர் ஜாக்குலின், மகாராஜா பட நடிகை சஞ்சனா நமீதாஸ், குக் வித் கோமாளி பசுனிதா, செல்லமா சீரியல் நடிகை அன்ஷிகா, சீரியல் நடிகை தர்ஷா குப்தா, டிடிஎஃப் வாசனின் கேர்ள் பிரண்ட் ஷாலின் சோயா, சௌந்தர்யா நஞ்சுண்டன், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வேட்டையன் வில்லனிடத்தில் ரஜினி சொன்ன விஷயம்… நெகிழ்ச்சியில் சாபுமோன்