ADVERTISEMENT

Bigg boss 7 Day 47: வீட்டின் முடிவை எதிர்த்து போராடும் விசித்ரா – அர்ச்சனா!

Published On:

| By Monisha

Bigg boss Tamil 7 Day 47

ஐஷுவின் எலிமினேஷன் குறித்து மாயாவிடம் விசித்ரா சொன்ன கருத்தை, அப்படியே நிக்‌சனிடம் மாயா பற்றவைப்பதாக  எபிசோட் தொடங்கியது. Bigg boss Tamil 7 Day 47

‘ஐஷு போனதுக்கு நீ தான் காரணம்ன்னு சொல்றாங்க. அப்போ பொண்ணும் பையனும் பேசுறதையே அவங்க தப்பா சொல்றாங்க. எவ்வளவு பிற்போக்குதனமா இருக்காங்க பார்த்தியா..?’ என மாயா பற்ற வைக்க, ’அது எப்படி, அப்படி சொல்லலாம்’ என மாயா நினைத்தபடியே ரியாக்ட் செய்தார் நிக்‌சன்.

ADVERTISEMENT

மறுபக்கம் பூர்ணிமா – விஷ்ணு பேசிக்கொள்ளும்போது , ‘நாங்க பல பேருக்கு ஸ்கெட்ச் போட்ருக்கோம்’ என விஷ்ணுவிடம் பூர்ணிமா உளறியதையும் பார்க்க முடிந்தது. இப்படி தங்கள் குழுவின் ரகசியத்தை உடைத்ததற்காக குழுவின் தலைவி மாயா, பூர்ணிமாவை திட்டுவதை அடுத்ததாக வந்த மேக்கப் ரூம் காட்சியில் பார்க்க முடிந்தது.

Bigg boss Tamil 7 Day 47

ADVERTISEMENT

குறிப்பாக, ‘அவன் என்ன உன் புருஷனா..?’ என மாயா பூர்ணிமாவிடம் கேட்டார். இந்த பூர்ணிமா – விஷ்ணு லவ் கண்டெண்டே மாயா – பூர்ணிமா சேர்ந்து திட்டிய தனித் திட்டம் என 24×7 லைவ் பார்ப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள் (நவ.17) காலையிலேயே ஒரு டாஸ்கை அறிவிக்கிறார் பிக் பாஸ். அந்த கேரக்டர் ஸ்வாப்பிங் (character swapping) டாஸ்கில் தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் இருந்த சிரமங்களை எல்லோர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்பதே டாஸ்க்.

ADVERTISEMENT

’அவர்கள் எங்கு அந்த டாஸ்கை செய்தார்கள் பிக் பாஸ்? ஏற்ற கதாபாத்திரத்தை டேமேஜ் செய்வதை தானே பிரதான டாஸ்க்காக செய்தார்கள்…’ என பார்க்கும் பலரும் பிக் பாஸையே கேட்டிருக்கக் கூடும். சரி, பிக் பாஸ் சொன்ன இந்த டாஸ்கையாவது சரியாக செய்தார்களா எனக் கேட்டால், இப்போதும் அதே டேமேஜ் செய்யும் பாணியிலேயே அனைவரும் சொன்னதின் மூலம், வன்மம் எந்தளவிற்கு இந்த வீட்டிற்குள் பழக்கமாகியுள்ளது என்பது தெரிந்தது. மொத்தமாகவே இந்த சீசனில் வன்மம் கொஞ்சம் ஜாஸ்தியாகவே அனைவரிடத்திலும் இருந்து வருகிறது என்பது பொதுவான கருத்து.

மாயா, முந்தைய இரவில் நிக்‌சனிடம் பற்றவைத்தது வெடிக்கத் தொடங்கியது. விசித்ராவிடம், ‘ஐஷூ வெளிய போனதுக்கு நான் எப்படி காரணம். அப்படி நீங்க சொன்னா.., நாளைக்கு அர்ச்சனா வெளிய போனா அதுக்கு நீங்க தான் காரணமா..?’ என விசித்ராவிடம் நிக்‌சன் வாக்குவாதம் செய்ய, விசித்ரா பக்கம் வழக்கம் போல் ஆஜரான அர்ச்சனா, ‘எல்லாரும் ஒரு நாள் வெளிய போவோம் நிக்‌சன். அப்படி போறப்போ நீயே ஐஷு வெளிய போனதுக்கு யார் காரணம்ன்னு தெரிஞ்சிப்ப’ எனக் கூறியது சரியான பதிலடி தான்.

அதற்கடுத்து ஆறிப்போன ரயில்வே ஸ்டேஷன் வடை போல் ஒரு போரிங் டாஸ்கை பிக் பாஸ் அறிவித்தார். ஆனால், அது நாமினேஷனுக்கான டாஸ்க். இதில் விசித்ரா – அர்ச்சனா பங்கேற்க கூடாது என ஹவுஸ்மேட்ஸ் வாக்களிக்க, அந்த வீர தீர டாஸ்கை விஷ்ணு, பூர்ணிமா, ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரம், மணி, ரவீனா ஆகியோர் பங்கேற்றனர். நாமினேஷனுக்கான எந்த வித யுக்தியுமின்றி அந்த போரிங் டாஸ்கை, மிக போரிங்காக விரைவில் விளையாடி முடித்தனர். தன் தோழி பூர்ணிமாவே இப்படியான சேஃப் கேமை விளையாடியது மாயாவுக்கு பிடிக்கவில்லை.

நேற்று வார இறுதி என்பதால், இந்த வாரத்தின் சிறந்த மூன்று போட்டியாளர்களை கேப்டன்சி டாஸ்கிற்காக தேர்ந்தெடுக்க சொன்னார் பிக் பாஸ். நிக்‌சன், கூல் சுரேஷ், தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜெயிலுக்கு அனுப்பப்பட வேண்டிய சுவாரஸ்யம் இல்லாத போரிங் போட்டியாளர்களாக அர்ச்சனா – விசித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது போன்ற தேர்வுகள் வாராவாரம் நடைபெறுகிறது. 24×7 லைவில் கூட முகம் காட்டாத கானா பாலா, பிராவோ, அக்‌ஷயா, விக்ரம் போன்றவர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பது வீட்டின் கும்பல் மனநிலையை குறிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Bigg boss Tamil 7 Day 47

ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஒருவரை தேர்வு செய்தால், அடுத்தடுத்து வரும் அத்தனை போட்டியாளர்களும் அவரையே தேர்வு செய்யும் போக்கு நீடித்து வருகிறது. இது விளையாட்டையும் எந்த வகையிலும் சுவாரஸ்யம் ஆக்காது. இதுகுறித்தாவது இந்த வார இறுதியில் நம் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் மையத்தில் இல்லாது பேசினால் நன்று. இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ளாத விசித்ரா – அர்ச்சனா சென்ற வாரம் கமல்ஹாசன் பாராட்டிய ஒத்துழையாமை இயக்கத்தை கையில் எடுத்தனர்.

வீட்டிற்கு வெளியில் படுக்கப்போவதாக சொல்லி, அங்கேயே படுத்துக்கொண்டனர். வீட்டின் கேப்டனான தினேஷ், ‘நான் மத்த கேப்டன் மாதிரி எல்லாத்துக்கும் பிக் பாஸ் கிட்ட கேட்டுட்டு இருக்க மாட்டேன்’ என நமது ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரமை லேசாக குத்திவிட்டு, ‘இவர்களின் இந்த முடிவுக்கு எந்த தண்டனையை தரலாம் என கலந்து ஆலோசிப்போம்’ என கூறியது ஒரு ஸ்ட்ரிக்ட் கேப்டன் என்கிற அவரது பொறுப்பில் சரியான முடிவே. இப்படியாக நேற்றைய எபிசோட் நிறைவானது. விசித்ரா – அர்ச்சனாவின் இந்த ஒத்துழையாமை இயக்க போராட்டம் கமல்ஹாசன் எபிசோட் வரை நீடித்ததா என்பது இன்று (நவ.18) தான் தெரியும். Bigg boss Tamil 7 Day 47

 – ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாதுகாப்புப் படை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டுதல்!

அடுத்தவர் மீது வெறுப்புணர்வு ஏன் வருகிறது?

தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share