ரம்யாவுக்கு பிக்பாஸ் ஸ்பெஷல் சலுகை!

Published On:

| By Minnambalam Desk

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களையே இவ்வளவு மொக்கையான தனித்தன்மையற்ற அடிப்படைப் புரிதலே இல்லாத போட்டியாளர்கள் உள்ள சீசன் என்றால், அது இந்த ஒன்பதாவது சீசன் தான்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு புரிகிற அளவுக்கு கூட உள்ளே ஆடுபவர்களுக்கு விளையாட்டுகளும் சூழல்களும் புரியவில்லை , என்ற நிலையில் பல போட்டியாளர்கள் .

ADVERTISEMENT

இவர்களில் பலர் டிவி சீரியல் நடிக நடிகையுயர் , யூ டியூப் ஆங்கர்கள் எனும்போது இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்களை ஒரு முறையாச்சும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது.

ஒவ்வொரு முறை பிக்பாஸ் முடியும்போதே அடுத்த சீசனுக்கு ஆவலோடு காத்திருக்கும் அதிசயப் பிறவிகள் உண்டு. இனி அந்த அதிசய பிறவிகளை பார்க்க முடியாது என்று அளவுக்கு டல்லடித்து எரிச்சல் ஊட்டுகிறது பிக்பாஸ் 9.

ADVERTISEMENT

விஜய் சேதுபதியை மதிக்காமல் பேச ஆரம்பித்த பல போட்டியாளர்கள் இப்போது பிக்பாஸையும் மதிப்பது இல்லை . விஜய் சேதுபதி சாருக்கு மரியாதை கொடுங்க என்று வார நாட்களில் பிக்பாஸ் கெஞ்சுவதும் , பிக் பாஸை மதிங்க என்று சனி ஞாயிறுகளில் விஜய் சேதுபதியும் கதறிக் கெஞ்சுவதுபரிதாப காமெடி .

ஆனாலும் பிக்பாசில் கன்னட மலையாள ஆதிக்கத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை .

ADVERTISEMENT

முன்பே நாம் பேசிய மலையாள ஆதிக்கம் என்பது விஜய் டிவி உட்பட எல்லா டிவிகளிலும் நிரம்பி வழியும் மலையாள டெக்னீஷியன்களால் வந்தது .

கன்னட ஆதிக்கம் என்பது விஜய் மல்லையா விஜய் டிவியை ஆரம்பித்த போது வந்தது .

ஸ்டார் கைக்கு விஜய் போன பின்னும் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டார்கள் கன்னடர்கள்

பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் சின்னச் சின்ன கேரக்டர்கள் , அதாவது மூன்றாயிரம் சம்பளத்தை மூன்று மாதம் கழித்து வாங்கி கொள்ளும் நடிகர்கள் எல்லாம் தமிழர்களாக இருப்பார்கள்.

ஆனால் கதாநாயகன் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் எல்லோரும் கன்னடர்களாகவே இருப்பார்கள் . அவர்களில் ரொம்ப கொஞ்ச பேருக்குத்தான் தமிழ் தெரியும் . இன்னும் கொஞ்ச பேருக்கு பேசினால் புரியும் . நிறைய பேருக்கு தமிழ் என்று ஒரு மொழி இருப்பது மட்டும்தான் தெரியும்.

அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களுடன் பேசக்கூட மாட்டார்கள். முடியாது. தனி அறையில் இருப்பார்கள் . அவர்கள் வாயில் தமிழ் வார்த்தையை திணித்தது வெளியே வர வைக்க, மாசம் அஞ்சாயிரம் சம்பளம் வாங்கும் ஓர் உதவி இயக்குனர் நெஞ்செலும்பு நொறுங்க நொறுங்க மாரடிப்பார்.

அப்படியும் அவர்கள் அரைகுறையாகத்தான் துப்புவார்கள்.

அப்புறம் டப்பிங்கில் அதை சரி செய்ய, பின்னணி பேசுபவரும் எடிட்டரும் செத்து சுண்ணாம்பாக வேணும். இப்படி நடிப்பவர்களுக்கு அப்புறம் அவார்டு வேறு கொடுப்பார்கள்

அது ஒரு பக்கம் .

பிக்பாஸ் விசயத்துக்கு வருவோம்

சென்ற வாரம் ரம்யா என்ற ஹுடுகி கெட்ட வார்த்தை பேசுவது, எது கேட்டாலும் தெரியாது, புரியல, கவனிக்கல என்று சொல்வது,…

எது கேட்டாலும் எனக்கு தமிழ் தெரியல அதான் புரியல என்று சொல்வது .. (தமிழ் தெரியாம தமிழ் பிக்பாஸ்க்கு வந்த என்று கேட்க முடியாது . தமிழ் தெரியாத ஆட்களை ஏன் எடுக்கறீங்க என்று பிக்பாஸைத்தான் கேட்க வேண்டும்)…

எல்லோரிடமும் மரியாதை இன்றி பேசுவது , தப்பிக்க முடியாத நிலையில் அழுவது என்று போனதோடு மட்டுமல்ல….

விஜய் சேதுபதி பேசிக் கொண்டு இருக்கும்போதே , ” வேணாம் சார் . என்ன விட்டுருங்க. நான் போறேன்..” என்று சொல்லி விட்டு மரியாதை இன்றி வெளியேறி, விஜய் சேதுபதியையே ஸ்தம்பிக்க வைத்தது .. என்று இதுவரை யாரும் செய்யாத செயல்களை செய்தார் .

”வெளியே போறதுன்னா பிக்பாஸ் கதவு திறக்கும் . போலாம்” என்று விஜய் சேதுபதியும் சொல்லி விட்டார். கதவும் திறந்து விட்டது .

ஆனாலும் அவரை சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்தி மன்னிப்பு கேட்கச் சொல்ல, அவரும் ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டதும் மன்னித்து விட்டார்கள். வழக்கம் போல ரம்யா எனக்கு ஒன்னும் புரியல;… தெரியல;… அறியல … நான் ஒரு கிளிப்புள்ள…”என்று பேசிக் கொண்டே இருக்கிறார்.

காரணம் ரம்யாவுக்கு தெரியாத மொழி தமிழ். ஆனால் அவருக்கு முதலில் தெரிந்த மொழி , அதாவது அவரது தாயமொழி கன்னடம். அதனால் அவர் பிக்பாஸில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அதே போல ஒரு போட்டியாளர் மெயின் கதவை விட்டு வெளியேறி விட்டால் , அப்புறம் அவர் உள்ளே வர முடியாது.

ஆனால் பிரஜன் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதவு திறக்க, ”என் கணவர் பிரஜின் இல்லாமல் நான் இங்கு இருக்க விரும்பவில்லை” என்று பிரஜினுக்கு முன்னாலேயே சான்டரா வெளியே போய்விட்டார் .

ஆனால் அவரை மீண்டும் திறந்து கிடக்கும் வீடு போல உள்ளே வர அனுமதிக்கிறார்கள் . (காரணம் பிரஜின் சான்ட்ரா இருவரும் மலையாளிகள் )

பிக்பாஸ் இப்போ எல்லாம் ரொம்ப டேமேஜ் பாக்ஸ் !

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share