முந்தைய பிக்பாஸ் சீசன்களில் கமல் ஹாசன் எண்ட்ரீ தரும் வார இறுதி எபிசோட்கள் அத்தனையும் மிக சுவாரஸ்யமாக இருக்கும். வீட்டுக்குள் நடந்த அராஜகங்கள், அத்துமீறல்கள், குரூப்பிசம்(groupism) போன்றவைகளை நமது ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ தட்டிக் கேட்பார் என்கிற நம்பிக்கை பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. bigg boss season 7 day 55
ஆனால், இந்த சீசனைப் பொறுத்தவரையில் மிக சுவாரஸ்யமில்லாத எபிசோட்களாக கமல்ஹாசனின் வார இறுதி எபிசோட்கள் மாறி இருப்பது பிக்பாஸ் ரசிகர்களின் பெரும்பாலான கருத்தாகவே உள்ளது.
குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் கேள்விகளை மாயா மற்றும் அவர்களது குழுவினரிடம் கடந்த வாரங்களில் கமல்ஹாசன் கேட்க தவறியது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எபிசோடில் கமல்ஹாசன் வழக்கம் போல் எண்ட்ரீ தந்ததும் அகம் டிவி வழியே வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் நமக்கு காண்பிக்கப்பட்டன. அதில் பாத்ரூம் கழுவும் விவகாரத்தில் அர்ச்சனாவிற்கும் தினேஷுக்கும் முட்டிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.
பொதுவாகவே எந்த வேலை சொன்னாலும் அர்ச்சனா அதை சரி வர செய்யாமல் இருக்கிறார் என்கிற பேச்சு 24/7 லைவ் பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் லேசாக இருந்து வரும் சூழலில் இந்த விவகாரத்தில் அர்ச்சனாவின் கோபம் தேவையில்லாத ஒன்றாகவே தெரிந்தது.
அதைத்தொடர்ந்து ஒரு முட்டைக்காக ஏறத்தாழ ஒரு கலவரமே பிக் பாஸ் வீட்டில் நடந்தது. ஆளுக்கு இத்தனை முட்டை என கணக்கு வைத்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் தனது பங்கை மணி கேட்க, அதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் மணிக்கு சப்போர்ட்டாக கூல் சுரேஷ் வர, அவரை ஜோவிகா எதிர்க்க, ஜோவிகாவிற்காக பூர்ணிமா வர என வடக்கு நண்பர்கள் ரீல்ஸில் வருவது போல் ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி அடித்துக் கொள்வது போல் தோன்றியது. கடைசியாக வந்த நிக்சன், ‘ஏன்டா சோற்றுக்காகவா டா இப்படி அடிச்சிக்கிறீங்க’ என கூறியது, பார்வையாளர்களின் குரலும் கூட.
இதையடுத்து எபிசோடில் விசித்ராவின் கணவரிடம் தான் பேசியதாகவும், இத்தகைய சூழலில் மனைவியுடன் துணையாக நின்றதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னதாகவும் கமல் தெரிவித்தார். மேலும், தனக்கு நேர்ந்த துயரத்தை தைரியமாக வெளியில் சொன்ன விசித்ராவையும் பாராட்டினார்.
தினேஷின் இந்த வார கேப்டன்சி குறித்து அனைவரிடத்திலும் விசாரித்தார் கமல்ஹாசன். அதில் சர்க்கரையை ஒளித்து வைத்த விவகாரம் குறித்து ஜோவிகாவிடம் விசாரிக்க, ‘நாங்க விளையாட்டுக்கு தான் செஞ்சோம் சார் . எங்களுக்கு இது விதி மீறல்னே தெரியாது. ஏன் எங்களுக்கு பிக் பாஸ்னா என்னன்னு கூட தெரியாது’ என்கிற அளவுக்கு ஜோவிகா உருட்ட, அவரை தொடர்ந்து நக்கலடித்தார் கமல்.

உடனே சுதாரித்த பூர்ணிமா, ‘போதும் ஜோவிகா, வழக்கம் போல சரண்டர் ஆகிருவோம்’ என கமல்ஹாசனிடம் வழக்கம் போல மன்னிப்பு கேட்டனர். இது குறித்து பேசும் போது ’மைக்கை கழற்றி விட்டு பேசுவதும் ரூல் பிரேக்கிங்கில் தான் வரும்’ என கமல்ஹாசன் மறைமுகமாக மாயா – பூர்ணிமாவை தாக்கினார். ஆனால் அதுகுறித்து ஏன் அவர்களிடம் இன்னும் விளக்கம் கேட்கவில்லை என்பது மட்டும் புரியவில்லை.
’என்னுடைய கேப்டன்சியில் நான் ஸ்ட்ராடஜி செஞ்சப்போ நீங்க கண்டிச்சீங்க. ஆனா அதே விஷயத்த தினேஷ் இந்த வாரம் செஞ்சாரு’ என பூர்ணிமாவும், ‘வீட்டுக்குள்ள இருக்குற எல்லா ஜோடியையும் பிரிக்கிறது தான் அவரோட திட்டம்னா…ஏன் மணி – ரவீனாவ மட்டும் பிரிக்கல’ என மாயாவும் கேட்ட கேள்விகள் சரியானதே.
அதற்கு, ‘மணி – ரவீனா ஜோடி எனக்கு பிரச்சனையா தெரியல. அதுனால அவங்கள நான் கண்டுக்கல’ என பதிலளித்தார் தினேஷ். ‘என்ன சொன்னாலும் அதுவும் தப்பு தான்’ என்றார் கமல். இந்த கேப்பில் விசித்ரா குறித்து அர்ச்சனா புறம் பேசுகிறார் என்கிற ஒரு விஷயத்தை சபையில் பற்ற வைத்தார் நிக்சன். அவர் பற்ற வைத்தது கமல் பிரேக் விட்டு சென்றதும் லேசாக எரியத் தொடங்கியது.
விசித்ராவும் அர்ச்சனாவும் மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது. மேலும், அர்ச்சனாவின் சில வாதங்களையும், கருத்துகளையும் முன் வைக்கையில், ஒரு பலமான போட்டியாளரின் துணையை அர்ச்சனா எப்போதும் தேடுகிறாரோ எனவும் தோன்றியது.
அடுத்ததாக இந்த வாரம் நடைபெற்ற பூகம்ப டாஸ்க் குறித்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடத்திலும் விசாரித்தார் கமல்ஹாசன். மேலும், இந்த வார எவிக்ஷனாக பிராவோ வீட்டை விட்டு வெளியேறுவதையும் அறிவித்தார். இதனை மிகவும் எதிர்பார்த்தவராக பிராவோவும் அதை புன்னகைத்தே ஏற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் காயினை தனது அக்கா மகளாக தான் நினைக்கும் ஜோவிகாவிற்கு வழங்குகிறேன் எனக் கொடுத்தார். மேலும், இந்த வீட்டிலிருந்து எத்தனை பேர் இந்த வாரம் எவிக்ட் ஆவார்கள், புதிதாக வீட்டிற்குள் வரவிருக்கும் வைல்டு கார்டு எண்ட்ரீகள் குறித்து நாளை சொல்கிறேன் என விடைபெற்றார் கமல்ஹாசன்.
அதைத்தொடர்ந்து வழக்கம் போல் ‘கமல் சார் என்ன மட்டும் தான் திட்டுவாரு. தினேஷும் நான் செஞ்சத தான் பண்ணாரு, ஆனா அவர எதுவும் சொல்லல’ என பூர்ணிமா புலம்ப ஆரம்பித்தார். ‘நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பா இருந்துச்சு. அதை இதோட சேர்க்காத. முதல்ல எல்லாத்தையும் நெகடிவ்வா எடுத்துக்குறதை நிப்பாட்டு’ என விஷ்ணு பூர்ணிமாவிற்கு சொன்னது, இந்த கேமை அவர் ஓரளவிற்கு புரிந்து வைத்துள்ளார் எனத் தெரிந்தது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அடையாளம் காண்பது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
bigg boss season 7 day 55
