காதல் …மனம் திறந்த VJ அர்ச்சனா

Published On:

| By Kavi

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை VJ அர்ச்சனா.

ராஜா ராணி 2 சீரியலில் நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்த அர்ச்சனா அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக போட்டியில் விளையாடிய அர்ச்சனாவை கண்ட ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆக ஜெயிக்க வைத்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் அர்ச்சனா பெற்றுள்ளார்.

அர்ச்சனாவுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்துக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த காதல் விவகாரம் குறித்து மனம் திறந்திருக்கும் நடிகை அர்ச்சனா “நானும் அருணும் காதலிக்கவில்லை.

அருண் எனக்கு ஒரு நல்ல நண்பர் தான். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை” எனக்கூறி இந்த காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: ஸ்வீட் பிரியரே… ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?

சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்: என்ன காரணம்?

ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி : என்ன ஆச்சு?

டாப் 10 செய்திகள் : மோடி பிரச்சாரம் முதல் புஷ்பா 2 அப்டேட் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share