நேற்று பாதியில் முடிந்த கோல்டன் ஸ்டார் டாஸ்க்கில் இருந்து தொடங்கியது இன்றைய பிக் பாஸ் எபிசோட்.
நிக்ஷன் முன் வந்து தான் எந்த அளவு சிறப்பான எண்டர்டெய்னர் என ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் வாதிட ஆரம்பிக்கும் போது உடனே குறுக்கிட்ட பிரதீப் , ‘தம்பி உன் பேரே இங்க யாருக்கும் சரியா தெரியல. நீ எப்படி டா வெளிய தெரிஞ்சிருப்ப..?’ என கேட்க, ‘உங்க பேர இன்னும் கமல் சாரே நியாபகம் வைச்சிக்கல, பிரதீப்க்கு பிரவீன்னு சொல்றாரு’ என கவுண்ட்டர் தந்து பிரதீப்பை வாயடைக்க வைத்தார். ஆக, பிரதீப்க்கு மீண்டும் ஒரு ‘தோத்துக்குட்டே இருக்கியே டா!’ மொமெண்ட் நிகழ்ந்தேறியது.

அடுத்ததாக பிரதீப் வந்து தன் வாதத்தை பேச, அதே வன்மத்துடன் பிரதீப்பை தாக்கினார் நிக்ஷன். ‘நீ எல்லாம் பேச தகுதியே இல்ல டா!’ என பிரதீப் சொன்னதும் நிக்ஷன் வெகுண்டெழ ஆரம்பித்தது சண்டை. ‘நீ நல்லா வெளிய நின்னு கேம்ம பார்த்துட்டு வந்து எல்லார்டையும் நடிக்கிறது தான் உன் ஸ்ட்ரேடஜி’ என கொதித்துப் பேசிய நிக்ஷன், எத்தி உதைத்த சோஃபா தலையணை பெட் ரூமிற்கு எகிறியது.
அடுத்தடுத்தாக பேசிய விசித்ரா, ‘என்ன பார்க்குறதுக்கு பல பேர் கியூரியஸா(curious)ஆ இருப்பாங்க. அதுனால நான் தான் நல்ல எண்டர்டெய்னர்’ எனப் பேச காண்டான பிக் பாஸ், பேச்சு முடிவதற்குள்ளேயே பஸரை அடித்து விட்டார்.
அதற்கு முன்னரே அதை தங்களது தொலைக்காட்சியில் காணும் பார்வையாளர்கள், அந்த பஸரை ரிமோட்டில் தேடியிருக்கலாம். அதற்கு பின்னர் யார் வெற்றி பெற்றார் என ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் ஓட்டெடுப்பு நடந்த போது, ஜோவிகா பிரதீப்பை தேர்ந்தெடுத்தார்.
உடனே முழு வன்மத்துடன் எழுந்த பூர்ணிமா, ‘எத வைச்சி நான் vote போடுறது பிக் பாஸ்? இப்படி பிரதீப்ப செலெக்ட் பண்ணது கரெக்டா..?’ எனக் கேட்க, ’ஜோவிகா பண்ணது தான் சரி!’ என தக் லைஃப் கொடுத்து ‘அராத்தி’ அக்காவை ஷட்டரை மூடும் என சைலண்டாக சொல்லிக் கடந்தார் பிக் பாஸ். பின், இந்த டாஸ்கில் ‘கூல் சுரேஷ்’ தான் வின்னர் என மொத்த ஹவுஸும் முடிவு செய்ய, இந்த வார கோல்டன் ஸ்டார் ஆனார் கூல் சுரேஷ்.

இந்த டாஸ்கில் தொடங்கிய நிக்ஷன் – பிரதீப் சண்டை இரவிலும் தொடர்ந்தது. ‘நான் உன்ன தகுதி இல்லன்னு சொன்னது, ரூல்ஸ பத்தி `பேச யாருக்குமே தகுதி இல்லங்கிறதுல தான் சொன்னேன். உன்ன அடிச்சி நான் என்ன டா பண்ண போறேன். உன்ன ஆர்டிஸ்ட்ன்னு நினைச்சு மரியாதை வைச்சிருந்த என்ன செருப்பால அடிக்கனும் டா’ என்றார்.
அதற்கு பின் தனியாக சென்று மணிசந்திராவிடம் அழுத நிக்ஷன், ‘நான் பார்த்த வலிய அந்த ஆளும் பார்த்திருக்கான். அந்த மனுஷன் என்ன பார்த்து நீ கேவலமா இருக்கன்னு சொல்றப்போ நானே என்ன பார்த்து சொல்ற மாதிரி இருக்கு’ என சொல்லிய தருணம் மிக சிறப்பாக இருந்தது.
இந்த பிக் பாஸ் வீட்டின் கிச்சனில் தொடர்ந்து மூக்கை நுழைக்கும் விசித்ராவை மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிலேயே தள்ளினால் சிறப்பாக இருக்கும். ‘இவங்களுக்கு உப்புமாவ உதிரியா பண்ண தெரியல, மரியாதையும் இல்ல’ என ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் கூற, ‘உப்புமால கொத்தமல்லி போடலாம், மரியாதைய போட்டு எப்படி பிக் பாஸ் உப்புமா பண்ண முடியும்..?’ என கேமராவைப் பார்த்து கூல் சுரேஷ் கேட்டது, அவர் வாழ்நாளில் செய்த சிறந்த காமெடி. ராம்கி பட காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் போல் ரகளை செய்து வருகின்றனர் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ். மேலும், வன்மத்துடன் பழி வாங்க சரியான நேரத்திற்கு காத்திருக்கின்றனர்.
– ஷா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!
