”ஏழையாக செத்தாலும் கோழையாக சாக மாட்டேன்” என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஜனவரி 14-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நிகழ்ந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
மணி 2-வது இடமும், மாயா 3-வது இடமும் பிடித்தனர். முதன்முறையாக வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர் டைட்டிலை வென்ற அதிசயம் இந்த சீசனில் நடந்தது.
என்றாலும் அர்ச்சனா டைட்டில் வென்றதுக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. இதனால் அவர் பிக்பாஸ் விருந்தில் கூட கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது அனுபவம் குறித்து சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் நிக்ஸன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”ஏழையாக செத்தாலும் கோழையாக சாக மாட்டேன்,” என ரஜினி புகைப்படத்துடன் பஞ்ச் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Your thoughts for this story?
My simple question to Mr Nixen apo
en sir veliya vandhu 1 month kaluchu
interview koduthinga ……ivalo naal tution class attend
pannitu irunthingala !#BiggBossTamil7 pic.twitter.com/iaVyOZkgUw— Sekar 𝕏 (@itzSekar) January 25, 2024
இதைப்பார்த்த ரசிகர்கள், ”என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க” என பங்கமாக அவரை கலாய்த்து வருகின்றனர்.
இறுதிவரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஷு, நிக்ஸன் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். பின்னர் பூர்ணிமாவுடன் ஜோடி போட்ட நிக்ஸன் கடைசிக்கட்டத்தில் வெளியேறி, பார்வையாளர்களின் நெஞ்சில் பால் வார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”உதிரன் வருகிறான்”: கங்குவா அப்டேட்!
’குடவோலை தேர்தல்’: குடியரசு தின விழாவில் கவனம் ஈர்த்த தமிழ்நாடு ஊர்தி!