கூல் சுரேஷ் வெளியேறியதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக குறைந்துள்ளது. bigg boss no captain week
தற்போது உள்ளே மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, விசித்ரா, சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ் மற்றும் நிக்ஸன் ஆகியோர் உள்ளே இருக்கின்றனர்.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் அந்த ஐந்து போட்டியாளர்கள் யார்? என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
இதில் பூர்ணிமா, அர்ச்சனா, மணி சந்திரா, விஷ்ணு விஜய், தினேஷ் ஆகிய ஐந்து பேரும் இறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த நிலையில் வீட்டில் ஒரு புதிய விதிமுறையை பிக்பாஸ் கொண்டு வந்துள்ளார். அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு கேப்டன் கிடையாது.
BB brings No captain week!#BiggBossTamil7#BiggBoss7Tamil
https://t.co/l76F7eEe5u— BB Mama (@SriniMama1) December 18, 2023
இதுகுறித்து பிக்பாஸ், ” சிலர் தான் கேப்டன் ஆகணும் அப்படின்னு யோசிச்சு, முயற்சி செஞ்சு சில மாற்றங்களை கொண்டு வந்து ஏண்டா இந்த பதவிக்கு வந்தோம்னு? யோசிச்சு இருக்கீங்க. சிலர் நான் வந்தா நிச்சயம் மாற்றம் கொண்டு வருவேன் அப்படின்னு முனைப்போட முயற்சி செஞ்சு.
இதனால தான் அந்த நபர் அப்படி சொன்னாரோ? நான் தான் தப்பு பண்ணி அவசரப்பட்டு கேப்டன் ஆகிட்டேனோ? அப்படின்னு சொன்னதுண்டு. சிலர் நம்ம ரவீனா மாதிரி இந்த வாரம் நான் சேவ் ஆகிருவேன். அதனால நான் கேப்டன் ஆகி என்ன பிரயோஜனம்? அப்படின்னு யோசிச்சதுண்டு.
அதனால இந்த வாரம் எல்லா பிரச்சினைகளையும் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து தான் டீல் பண்ண போறோம் வீட்டிற்கு கேப்டன் கிடையாது. ஆனால் நான் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்பேன். இந்த வீட்டின் பொறுப்பு உங்கள் எல்லாருடையது,” என போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நிக்ஸன், விஷ்ணு விஜய், மணி சந்திரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாகி படாதபாடு பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
சபரிமலைக்கு போயிட்டு திருச்செந்தூருக்கு வராதீங்க… ’சாமிகளுக்கு’ எச்சரிக்கை!
தொடரும் கனமழை: தென் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!
bigg boss no captain week
