ராகுலுக்கு பிரம்மாண்ட வெற்றி உறுதி!

Published On:

| By christopher

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தேசிய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. எனினும் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் இடையே குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருப்பதால் ஆட்சியைக் கைப்பற்ற போவது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கேரளாவின் வயநாட்டில் மற்றும் உத்தப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மதியம் 1 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 1,87,508 வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாட்டில் 2,65,023 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT

ஏறக்குறைய ராகுல்காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

தருமபுரி : பின்னடைவில் பாமக!

ஒடிசா : ஆட்சியை இழக்கும் நவீன் பட்நாயக்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share