எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்… ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த முன்னாள் ஊராட்சி துணை தலைவர்!

Published On:

| By Minnambalam Desk

Big Pocket at Edappadi Palaniswami show

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த பிக்பாக்கெட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Big Pocket at Edappadi Palaniswami show

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணத்தை இன்று (ஜூலை 7) பிற்பகல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்குகிறார். இந்த நிகழ்வுக்காக ஞாயிறன்று சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் மேட்டுப்பாளையம் வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை கலியுக தெய்வமான வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தேக்கம்பட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜிடமிருந்து (பிளேடால் அறுக்கப்பட்டு) ரூபாய் ஒரு லட்சம் பிக்-பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Big Pocket at Edappadi Palaniswami show

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share