ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை: தேர்வு கிடையாது… நேரடி இன்டர்வியூ! ஐடிஐ முடித்தவர்களுக்கு ‘கோல்டன்’ சான்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

BHEL recruitment for ITI apprentices

“ஐடிஐ முடித்துவிட்டு நல்ல கம்பெனியில் டிரெய்னிங் எடுத்தால், எதிர்காலம் பிரகாசமாக இருக்குமே!” என்று நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனம் (BHEL – Ranipet), தொழிற்பழகுநர் (Trade Apprentice) பயிற்சிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு, ஆன்லைன் விண்ணப்பம் என்று அலையாமல், நேரடியாகச் சான்றிதழ்களுடன் சென்று வேலையை உறுதி செய்யும் ‘வாக்-இன்’ (Walk-in Interview) முறை என்பதால், போட்டியாளர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

காலியிடங்கள் விவரம்:

ராணிப்பேட்டை பிஎச்இஎல் (BHEL) வளாகத்தில் மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

என்னென்ன பிரிவுகளில் ஆட்கள் தேவை?

  • பிட்டர் (Fitter)
  • வெல்டர் (Welder)
  • எலக்ட்ரீசியன் (Electrician)
  • மோட்டார் மெக்கானிக் (Motor Mechanic)
  • எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் டர்னர் (Turner) உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

ADVERTISEMENT
  • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ (ITI – NCVT) முடித்திருக்க வேண்டும்.
  • ஆண்டு: 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும்.
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

எப்போது நேர்காணல்?

இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 15, 2025 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.

நேரம்: காலை 9.00 மணி முதல்.

எங்குச் செல்ல வேண்டும்?

மனிதவள மேம்பாட்டு மையம் (HRDC),

பிஎச்இஎல் (BHEL),

முகுந்தராயபுரம்,

ராணிப்பேட்டை – 632 406.

என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்?

நேர்காணலுக்கு வருபவர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள் (10th, ITI Marksheets), ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

அத்துடன், மத்திய அரசின் அப்ரண்டிஸ் இணையதளத்தில் (apprenticeshipindia.gov.in) பதிவு செய்ததற்கான நகலையும் வைத்திருப்பது அவசியம்.

சம்பளம் (உதவித்தொகை):

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மத்திய அரசின் விதிமுறைப்படி மாதம் சுமார் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு வழங்கப்படும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC), பிற்காலத்தில் ரயில்வே மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை பெறப் பெரிதும் உதவும்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடிஐ பட்டதாரிகள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share