இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியும், பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளருமான பவதாரிணி(47) நேற்று(ஜனவரி 25) காலமானார்.
கல்லீரல் புற்றுநோய்க்கு இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்க சென்ற பவதாரிணி, சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே மரணமடைந்தார்.
https://twitter.com/vibekadhalan/status/1750545368624816170
இது திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பவதாரிணி கடைசியாக பாடிய மாநாடு படத்தின் பாடல் மற்றும் பாடல் பதிவின்போது, அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
The voice that forever lives in the heart of people for its innocence and love! You were a pure soul! Gone too soon! I pray to God to give strength to the family of Illayaraja sir and my brother @thisisysr at this moment! Rest in peace Bhavatharini. 💔#Bhavatharini #RIP pic.twitter.com/PO3ArYGq49
— Silambarasan TR (@SilambarasanTR_) January 25, 2024
இதுகுறித்து நடிகர் சிம்பு தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” உங்கள் வெகுளித்தனம் மற்றும் அன்பு ஆகியவற்றால் மக்கள் மனதில் என்றும் வாழும் குரலாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரம் சென்று விட்டீர்கள்.
இந்த தருணத்தில் இளையராஜா சார் மற்றும் சகோதரர் யுவன் ஆகியோருக்கு வலிமை அளிக்குமாறு கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் பவதாரிணி”, என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
RIP Bavatharini 💔🙏🙏
Stay Strong na @thisisysr #RIPBhavatharini pic.twitter.com/3i0fvrMu1D— Raja (@raja47107204) January 26, 2024
இன்று மாலை 3.3௦ மணிக்கு அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ : இளையராஜா மகள் பவதாரிணி காலமானார்!
