பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம் : இயக்குநர் உருக்கம்!

Published On:

| By christopher

Bhavatharini's last film composed

மறைந்த பிண்ணனி பாடகியும், இசையமைப்பாளருமான  பவதாரிணி  கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் ‘புயலில் ஒரு தோணி’.

புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.

அப்படத்தின் இயக்குநர் ஈசன் கூறியதாவது, ”பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக போட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தேன்.

நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது.

படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யபடுத்தினார்.

இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.
மேலும், பின்னணி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.

படம் வெளிவருவதற்கு முன்பாக மரணத்தை தழுவுவார் என்று நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை.

எங்கள் திரைப்படத்தின் மிக பெரிய பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்” என ஈசன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

என்ஐஏ அதிகாரிகள் என்னை விசாரிக்காதது ஏன்? – சீமான் ஆவேசம்!

ராம.நாராயணனின் ஹிட் பட ரீமேக்கில் நயன்தாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share