பிரபல மலையாள நடிகை பாவனா 2017இல் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது
வழக்கு விசாரணை அதிகாரிகளை அவர் கொல்ல திட்டம் தீட்டியதாகவும், நடிகை துன்புறுத்தப்பட்ட அந்த வீடியோ காட்சிகளை தனது மொபைல் போனில் பார்த்ததாகவும் நடிகர் திலீப்பின் நண்பராக இருந்து, தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ள இயக்குநர் பாலசந்திர மேனன் வழக்கு விசாரணையின்போது போலீஸில் வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து திலீப் மீது புதிய வழக்கு பதியப்பட்டு அந்த வழக்கு சம்பந்தமான விசாரணையும் நடைபெற்று ஒரு வழியாக அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் திலீப்பிடம் இருந்த நான்கு மொபைல் போன்கள் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தற்போது அந்த மொபைல் போன்களில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாக தடய அறிவியல் அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதால் திலீப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மொபைல் போன்களை ஒப்படைப்பதற்கு முன்பாக திலீப் அவற்றை மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் கொடுத்து சிக்கலான சில தகவல்களை நீக்க கூறியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மொபைல் சர்வீஸ் சென்டரில் விசாரணை செய்வதற்காக கேரள போலீஸார் மும்பை சென்றுள்ளனர்
இதுபற்றி ஓய்வுபெற்ற கேரளக் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, இது போன்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் ஏதாவது குளறுபடி செய்தால் அதுவே கூட அவருக்கு எதிரான சாட்சியமாகத்தான் மாறும். இதுபோக, மும்பையிலிருந்து அந்த போனில் என்னென்ன குளறுபடிகள் செய்யப்பட்டன என்கிற விவரங்கள் தெரியவந்தால் திலீப்புக்கு எதிராக மாறி, கூடுதலான சிக்கலை ஏற்படுத்தும்” என்றார்.
**-இராமானுஜம்**
Wஆதாரத்தை அழித்து சிக்கிய திலீப்
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel