தமிழ் திரையுலகின் சாதனையாளரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன் 10) காலமானார்.
அவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் பாரதிராஜா பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குநர்களை உருவாக்கியவர் பாரதிராஜா. எனினும் தான் தற்போதைய முதல்வரான விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை என்ற தனது குறையை சில இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் விஜய்யின் 46ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா, ”
என் கலைப்பயணத்தில்
துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.
இன்று வலிகளை,வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக
உலகமே,கொண்டாடப்படும்
“விஜய்க்கு”,என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி,நக்கலுக்கான
அந்த ,உடல் பாவனை,
நடனத்தின் நளினம்,
சண்டைக்காட்சிகள்,துணிச்சல் ,என அதிலும் மேலாக
கோடிக்கனக்கான, ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட
விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று,நீடூழி வாழ
பாசத்துடன் வாழ்த்துகிறேன்
அன்புடன்
பாரதிராஜா” என்று வாழ்த்தியிருந்தார்.
விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது எத்தனையோ வலிகளை கடந்து வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்தவகையில் அப்போதே v என்றால் வெற்றி, பல வலிகளை வலிமையாக்கியவர் என்று விஜய்யை பாராட்டியிருக்கிறார் பாரதிராஜா
இன்று அவரது மறைவைத் தொடர்ந்து முதல்வர் விஜய் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
