பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்தாரா மாணவர்?

Published On:

| By Minnambalam Login1

bharathiar university rn ravi

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று(அக்டோபர் 14) நடைபெற்று வருகிற பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் தமிழக ஆளுநர் ரவியிடம் கடிதம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும் மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தராகிய ஆர்.என்.ரவி, உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் மற்றும் சிறப்பு விருந்தினராக ஐ.ஐ.டி-ஹைதராபாத்தின் இயக்குநர் பி.எஸ் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா தொடங்கியது. அதற்குப் பின், சிறப்பு விருந்தினர் ஐ.ஐ.டி-ஹைதராபாத் இயக்குநர் பி.எஸ்.மூர்த்தியின் உரையைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குப் பட்டமளிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு மாணவருக்கும் ஆளுநர் ரவி முனைவர் பட்டம் வழங்கிக்கொண்டு இருக்கும்போது, முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர் ஆளுநர் ரவியிடம் ஒரு கடிதத்தை அளிக்க முயன்றபோது ஆளுநருடன் இருந்த பாதுகாவலர்கள் அவரை தடுக்க முயன்றனர்.

எனினும் அவர்களை மீறி ஆளுநரிடம் அந்த மாணவர் அந்த கடிதத்தை வழங்கினார். இதனால் சிறிது நேரம் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விஷயங்கள் அந்த கடிதத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கவரைப்பேட்டை ரயில் விபத்து : மேலும் 10 பேருக்கு சம்மன்!

சென்னைக்கு கனமழை: 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share