“பொறியியல் படித்துவிட்டு ஒரு நல்ல கோர் (Core) கம்பெனியில் வேலை கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவின் ஏவுகணைத் தயாரிப்பில் முன்னணியில் திகழும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், தற்போது நிரந்தரமான அதிகாரிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த ‘மினிரத்னா’ நிறுவனத்தில் வேலை கிடைப்பது என்பது பலரது கனவு. அந்தக் கனவை நனவாக்க இதுவே சரியான நேரம்.
காலியிடங்கள் எவ்வளவு?
மொத்தம் 80 மேலாண்மைப் பயிற்சி (Management Trainee – MT) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உயர் அதிகாரி அந்தஸ்திலான பதவிகள்.
- எலக்ட்ரானிக்ஸ்: 32 இடங்கள்
- மெக்கானிக்கல்: 27 இடங்கள்
- எலக்ட்ரிக்கல்: 6 இடங்கள்
- கணினி அறிவியல் (CS): 4 இடங்கள்
- சிவில், கெமிக்கல், மெட்டலர்ஜி: தலா 1-2 இடங்கள்
- நிதி மற்றும் எச்.ஆர் (Finance & HR): 7 இடங்கள்
கல்வித் தகுதி:
- பொறியியல் பிரிவுக்கு: சம்பந்தப்பட்ட துறையில் (எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிஎஸ்) பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- நிர்வாகப் பிரிவுக்கு: எம்பிஏ (MBA), எம்.காம் அல்லது சிஏ (CA/ICWAI) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதில் தேர்வாகும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் தான் உண்மையான ‘ஜாக்பாட்’. பயிற்சி காலத்திலேயே அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.40,000 வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு, ஆண்டுக்குச் சுமார் ரூ.10.52 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை (CTC) சம்பளம் கிடைக்கும். இதுபோக, மத்திய அரசு ஊழியர்களுக்குரிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் உண்டு.
தேர்வு முறை:
- கணினி வழித் தேர்வு (CBT): இது வரும் ஜனவரி 11, 2026 அன்று நடைபெறும். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் உண்டு.
- நேர்காணல் (Interview): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ளவர்கள் பிடிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான bdl-india.in என்ற தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை).
கடைசி தேதி:
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.12.2025 (மாலை 4 மணிக்குள்).
பாதுகாப்புத் துறையில் பணியாற்றி நாட்டுக்குச் சேவை செய்யவும், அதே சமயம் கைநிறையச் சம்பாதிக்கவும் இதுவொரு அரிய வாய்ப்பு. இன்ஜினியர்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க!
