நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக இன்று ஜூலை 9-ந் தேதி நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் கோவை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. Bharat Bandh
மத்திய பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று காலை முதல் நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் பொதுவாக இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.
