பாக்யலெட்சுமி சீரியல் வேற லெவல்ல போய்ட்டு இருக்குனே சொல்லலாம், அம்மா மகன் பாசத்த தாண்டி சாதாரண பெண்களாலயும் சாதிக்க முடியும் அவங்களாலயும் சுய தொழில் செய்து முன்னேற முடியும் என்பதற்கு ஒரு உதாரணமா இருக்கு பாக்கியலெட்சுமி சீரியல். அந்த அளவுக்கு இந்த சீரியலுக்குனு ஒரு பேன்ஸ் பட்டாளம் இருக்கு.
மறுபக்கம் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒரு கலக்கு கலக்கும் நடிகர் பிரபு தேவா. அவர், நடிக்க இருக்கும் பெயரிடப்படாத ஒரு படத்துல அம்மாவாக நடிக்க பாக்யலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ஒப்பந்தமாகியிருக்காங்க.
நடிகர் பிரபுதேவா கூட இவங்க சூட்டிங் ஸ்பாட்ல எடுத்த புகைபடங்கள சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம்ல சேர் பண்ணிருக்காங்க. இதை பார்க்கும் போது தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் சரண்யா பொன்வண்ணனுக்கே டஃப் கொடுப்பார் போலயே என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மா கதாபாத்திரத்தில் ஒரு ரவுண்டு வந்துவிட்டார். தனுஷ், சூர்யா, சசிகுமார், பரத், உதயநிதி உள்ளிட்டோருக்கு அம்மா அதிலும் லூட்டி அடிக்கும் ரோல்களிலும் சென்டிமென்ட் ரோல்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த எம்டன் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியிருப்பார். அதே போல் “ பாக்யலெட்சுமி சுசித்ரா” வும் வருவாங்களா..! பொறுத்திருந்து பார்ப்போம்…!
மு.வா.ஜெகதீஸ் குமார்-