பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல- தார்மீக அறிவியல் கோவை பள்ளி வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

Published On:

| By Mathi

GR Swaminathan

பகவத் கீதை மதப்புத்தகம் அல்ல; தூய தத்துவங்களைப் பிரதிபலிக்கக் கூடியது; பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி என வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் ஆர்ஷ வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் பரம்பரை அறக்கட்டளை அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல் தாக்கல் செய்த மனுவில், ‘ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறியுள்ளதாவது:

  • மனுதாரர் அறக்கட்டளை பகவத் கீதையை கற்பிக்கிறது; இதனால் இந்த அறக்கட்டளை ஒரு மத அமைப்பு என முடிவுக்கு வந்தது சரியானது அல்ல.
  • பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல
  • பகவத் ஒரு தார்மீக அறிவியல்.
  • பகவத் கீதையை தேசிய தர்ம சாஸ்திரமாக அங்கீகரிக்கலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • காந்தி, அரவிந்தர், திலகர் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் அடிமை ஆட்சிக்கு எதிராகப் போராட பகவத் கீதையை பயன்படுத்தினர்.
  • பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் அடைத்து வைக்க முடியாது.
  • பகவத் கீதை பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி.
  • நமது முன்னோர்களின் தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது பகவத் கீதை.
  • யோகாவை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்துவது கொடூரமானது.
  • யோகா மதச்சார்பற்ற அனுபவம் என்கிறது கலிபோர்னியா நீதிமன்றம்.
  • மனுதாரரான அறக்கட்டளை மனுவை நிராகரித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share