UPI ஆப் யூஸ் பண்றீங்களா? உஷார் மக்களே: கவனமா இல்லனா பணம் பறிபோகும்!

Published On:

| By Santhosh Raj Saravanan

beware of these things while using upi app to prevent online frauds

இந்த விஷயங்களில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் உங்களுடைய அக்கவுண்டில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.

UPI மூலம் பணம் அனுப்புவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. காய்கறி வாங்குவது முதல் மதிப்பு மிக்க பொருட்கள் வாங்குவது வரை எல்லாவற்றையும் மொபைல் மூலமாக உடனுக்குடன் செய்ய முடிகிறது. ஆனால், கடந்த சில வருடங்களில் UPI மோசடிகளும் அதிகமாகிவிட்டன. இதனால் பல லட்சம் ரூபாய்கள் மக்களின் கணக்கில் இருந்து காணாமல் போய்விட்டன. நிதி ஆலோசகர்களின் கருத்துப்படி, உங்கள் UPI கணக்கை சேமிப்பு கணக்கில் இருந்து தனியாக வைத்திருப்பது நல்லது. UPI உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் சிறிதளவு பணத்தை மட்டும் வைத்திருங்கள் என்கின்றனர். இதனால் ஏதேனும் மோசடி நடந்தால் பெரிய இழப்பை தவிர்க்கலாம்.

ADVERTISEMENT

பெரும்பாலான வங்கிகளும், பணம் அனுப்பும் செயலிகளும் பரிவர்த்தனைக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கும் வசதியை தருகின்றன. இந்த வரம்பை நீங்கள் அமைத்துவிட்டால் மோசடி நடந்தாலும் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் போய்விடாது. UPI வேகமாக செயல்படுவதால், சில சமயங்களில் நாம் அவசரமாக செயல்பட்டு தவறுகள் செய்துவிடுகிறோம். அதனால், பணம் அனுப்பும்போது யாருக்கு அனுப்புகிறோம் என்ற பெயரை தெரிந்துகொள்ள வேண்டும். QR கோடு ஸ்கேன் செய்யும்போது திரையில் வரும் தகவல்களை கவனமாக படிக்க வேண்டும். அவசரமாக அனுப்பும் பணம் நமக்கு நஷ்டத்தை தரலாம்.

அதேபோல டிஜிட்டல் மோசடிகள் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கும் புரியும்படி சொல்ல வேண்டும். அவர்களின் மொபைலில் குறைந்த பண வரம்பை நிர்ணயித்து, சரியான முறையில் சரிபார்க்காமல் பணம் அனுப்பும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்கள் யூபிஐ பின் நம்பரை யாரிடமும் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். தெரியாத இணையதளங்களில் அல்லது மெசேஜ்களில் வரும் லிங்குகள் மூலம் உங்கள் மொபைலில் வைரஸ் வரலாம். இதனால் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் திருடப்படலாம். இதில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்கலாம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share