பனிக்காலம் வந்தாலே, ‘எப்போது இந்த சீசன் முடியும்?’ என்றுதான் சிலருக்கு நினைக்கத் தோன்றும். அதிலும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள், முதியோர், குழந்தைகள் குளிர்காலத்தில் அதிகமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
“ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள், இந்தப் பருவத்தில் கூடுமானவரை வெளியே அதிகம் போகக் கூடாது. தூசி இருக்கும் இடங்களில் ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.
இதய நோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து ‘பம்ப்’ செய்யப்படும் ரத்தத்தின் அளவு (cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது.
இதயப் பிரச்சினை உள்ளவர்கள், குளிர் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்குப் போகக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். பனிக் காலத்தில் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே பனியில் வராமலிருப்பது நல்லது. உடலை எப்போதும் கம்பளி ஆடையால் மூடி கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்படலாம். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், ‘பெல்ஸ் பால்ஸி’ (Bell’s palsy) எனப்படும் ‘முக வாதம்’ வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்
கடும் குளிரில் வெளியே போகும்போது, குளிர்ச்சியால் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல், மயக்கநிலைக்குப் போகக்கூடும். இதற்கு, ‘ஹைப்போதெர்மியா’ என்று பெயர். இது, உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்க வேண்டிய அவசரநிலை ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.
சிலருக்கு காலில் வெடிப்பு (Frost bite) ஏற்படும். தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று பொதுநல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குளிர்கால ஸ்பெஷல்… இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
“மீண்டும் வருவேன்” : மிரட்டிய ஞானசேகரன்… முடிவெடுத்த மாணவி!
சிறையில் அடைப்பு : மலேசிய பிரதமரின் மகனுக்கு பள்ளி பீஸ் கட்ட முயன்ற மன்மோகன்