ஹெல்த் டிப்ஸ்: ஸ்ட்ரெஸைக் குறைக்க சிறந்த வழி இதோ!

Published On:

| By Selvam

ஸ்ட்ரெஸ்…. ஒருநாளைக்கு ஒருமுறையாவது இந்த வார்த்தையை  உச்சரிக்காதவர்களை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம்.  அந்த அளவுக்கு அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட ஸ்ட்ரெஸ், சிலருக்கு  காரணமே இல்லாமல்  திடீரென தோன்றும்… சிலருக்கு அது உச்சம் தொடும்.

‘ஸ்ட்ரெஸ்ல மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு…’, ‘எங்கயாவது ஓடிடலாம்போல இருக்கு….’ என்றெல்லாம் பொங்கும் அளவுக்கு அது எல்லை மீறும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் காரணிகள் எக்கச்சக்கம்.

வாழ்விடம், சுற்றுப்புற சூழல் மாசு, அதீத சத்தம், அளவுக்கதிகமான வெயில் அல்லது குளிர் என சீதோஷ்ணநிலையில் ஏற்படுகிற திடீர் மாற்றங்கள்கூட ஒருவருக்கு ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நிலையில் அதை எப்படிக் கையாள்வது என்பதே பலரின் குழப்பமும்.

நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்துவிட வேண்டும். அப்போதுதான் உடல் ரிலாக்ஸ் ஆகும்.

நீண்ட, ஆழ்ந்த மூச்சு விட வேண்டும். ‘கார்பன் டை ஆக்ஸைடு டம்ப்’ ( carbon dioxide dump exercise ) என்றொரு பயிற்சி இருக்கிறது. பெருமூச்சு விடுவது போல வாயைத் திறந்து, ஆழமாக மூச்சை விட்டு, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்ற வேண்டும்.

தண்ணீர் குடிப்பது, குளிப்பது, எப்சம் சால்ட் சேர்த்த வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊறவைப்பது, ஏசி காற்று முகத்தில் படும்படி இருப்பது என உங்களுக்கு எது வசதியானதோ, அதைச் செய்யலாம்.

இவையெல்லாம் திடீரென தலைதூக்கும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபடும் வழிகள். அதுவே, உங்களுக்கு நீண்டகால ஸ்ட்ரெஸ் இருக்கும்பட்சத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதிலிருந்து மீள்வதே சரியானது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

ராமநாதபுரம் : தேர்தல் அறிக்கை வெளியிட்டார் பன்னீர்

குழந்தை பிறந்த கையோடு… மீண்டும் ‘குட்’ நியூஸ் சொன்ன காயத்ரி… வாழ்த்தும் ரசிகர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share