ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இந்த விஷயங்களை மறந்துவிடாதீர்கள்!

Published On:

| By christopher

எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் ஒரே மாதத்தில் 10 – 12 கிலோ குறைத்ததாகச் சொல்கிறார்களே… அது சரியானதா? ஒரு மாதத்தில் இத்தனை கிலோ தான் எடை குறைய வேண்டும் என ஏதேனும் கணக்கு இருக்கிறதா? தினமும் உடல் எடையை சரி பார்க்கலாமா? இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு டயட்டீஷியன்ஸ் சொல்லும் விளக்கம் இதோ…

“குறுகிய காலத்தில் அளவுக்கதிமான எடைக்குறைப்பு என்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, தசை இழப்பை ஏற்படுத்தும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, உடல் ஆற்றலையும் குறைக்கும்.

ADVERTISEMENT

எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் ஒருவர் இழப்பதெல்லாம் உடலில் உள்ள தண்ணீரின் எடையைத்தான். அதன் பிறகு அவர் எடுத்துக்கொள்ளும் உணவு, அவற்றின் கலோரி ஆகியவற்றைப் பொறுத்துதான் தசை மற்றும் கொழுப்பு ஆகியவை குறையத் தொடங்கும்.

சில நாள்களில் ஹெவியான உணவுகளைச் சாப்பிட நேரிடும். அந்த உணவுகளில் உள்ள அதிகமான கார்போஹைட்ரேட் உடலில் நீர் சேர்வதை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

இனிப்புகள், பழங்கள் என எல்லாவற்றிலும் கார்போஹைட்ரேட் இருக்கும். பலமாக உணவு உண்ட அடுத்தநாளே எடையைச் சரி பார்ப்பது தவறு. எடையில் ஏற்பட்ட ஏற்றம் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் குறையும்.

விசேஷங்கள், விருந்துகள் வரப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், உடற்பயிற்சிகளைத் தவறவிடாமல் செய்ய வேண்டியது முக்கியம்.

ADVERTISEMENT

வெளியில் சாப்பிடப் போவது தெரிந்தால் அன்றைய தினம் சற்று அதிகம் வொர்க் அவுட் செய்யலாம். அடுத்தவேளை சாப்பிடும்போது ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதல் நாள் இரவு பலமான விருந்து சாப்பிட்டிருந்தால், அடுத்த நாள் காலையில் காபியோ, கிரீன் டீயோ குடித்துவிட்டு, காலை உணவைத் தவிர்த்து விடலாம். கொஞ்சமாக சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளுடன் நேரடியாக மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

15 நாள்களுக்கொரு முறை எடை பார்த்தால் போதும். இன்ச் டேப் பயன்படுத்தி மார்பளவு, இடுப்பு, வயிறு மற்றும் தொடைப்பகுதிகளையும் அளந்து பாருங்கள். தினமும் எடையை செக் செய்ய வேண்டியதில்லை.

பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் உடல் எடையில் ஏற்றம் இருக்கலாம் என்பதால் அப்போதும் அதை சரிபார்க்கத் தேவையில்லை” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின் முதல் INDvsENG டி20 டிக்கெட் விற்பனை வரை!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… எல்லாருக்கும் ஏற்றதா ஆஃப் பாயில்?

ஸ்டாலினுக்கு எதிராக எம்.ஜி.ஆரை கையிலெடுத்த விஜய்… எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!

புஸ்ஸி ஆனந்த் – ஜான் ஆரோக்கியசாமி… வெடித்த மோதல்- விஜய் பஞ்சாயத்து!

விமர்சனம்: வணங்கான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share