ஒரு நிமிஷம்! மெனிக்யூர் என்பது கைகள் மற்றும் நகங்களை அழகுபடுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் செய்யப்படுகிற ஒரு அழகு சிகிச்சை ஆகும். Nail Care Tips in Tamil
நகங்களை சீர்படுத்துதல், மென்மையாக்குதல் மற்றும் நகங்களுக்கு வண்ணம் பூசுதல் போன்றவற்றுக்கு பார்லருக்கு செல்பவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால், ”கைகள் மற்றும் நகங்களின் அழகுப் பராமரிப்பான மெனிக்யூர் (Manicure) செய்ய பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக வீட்டிலேயே நகங்களை அளவோடு வெட்டிக் கொண்டாலே போதும்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
“கியூட்டிகிள் என்கிற நகக்கண், நகங்களைச் சுற்றி அவற்றைப் பாதுகாப்பதற்காக உள்ளது. பார்லர்களில் மெனிக்யூர் செய்யும்போது இந்த நகக்கண் காயப்படுவதற்கோ, சேதமடைவதற்கோ வாய்ப்பு உண்டு. இதன்மூலம் அங்கு பூஞ்சைகள் உருவாவது, நீர் கோப்பது போன்ற காரணங்களால் தொற்று உருவாகலாம்.
எனவே, மெனிக்யூர் செய்ய விரும்புகிறவர்கள் இந்த நகக்கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நீங்களே வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ நகங்களை அளவோடு வெட்டிக் கொள்ளலாம்.
நகங்களை வெட்டும்போது மொத்த நகத்தையும் ஒட்ட வெட்டிவிடக் கூடாது. மிகச்சிறிய அளவில் விட்டு வைத்தே வெட்ட வேண்டும். இல்லாவிட்டால் இதனாலும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உண்டு.
மேலும் கைகளையும், விரல்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். இவற்றுடன் நகங்களின் ஆரோக்கியத்துக்கென சப்ளிமென்டுகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்ளலாம். புரதச்சத்து கொண்ட உணவுகளும் நகங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். இது கால்களின் நகங்களுக்கும் பொருந்தும்” என்று அறிவுறுத்துகிறார்கள். Nail Care Tips in Tamil