புத்தாண்டு தினத்தன்று வீடே மணக்கும் அளவுக்கு குடும்பத்தினர் அனைவரும் விதம்விதமான பலகாரங்கள் செய்து சாப்பிடும்போது, வீட்டில் உள்ள நீரிழிவாளர்களுக்கு மட்டும் கோதுமை உப்புமான்னா கொஞ்சம் சலிப்பாகத்தான் இருக்கும். ஆனால், ‘என்ன செய்வது சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாயைக்கட்டித்தானே ஆகணும்’ என்பதில்லை… கீழ்க்கண்டவற்றை சாப்பிடலாம் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள். அவை…
“சிறுதானிய வகைகளான குதிரைவாலி, சாமை, வரகு, திணை, மக்காச்சோளம் போன்றவற்றை சாதம், உப்புமா, தோசையாகச் சாப்பிடலாம். செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ரகங்களின் உமியை நீக்கிவிட்டு உபயோகிக்கலாம்.
புரதச்சத்து அதிகம் தேவைப்படுவதால் பருப்பு, சாம்பார் போன்றவற்றை சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் புரதத்துக்கு முட்டையும், தோல் மற்றும் எலும்பு நீக்கிய சிக்கனையும் உண்ணலாம்.
தினமும் பருப்பு, சாம்பார் என சலிப்படைந்தால் காரக்குழம்பு செய்து சாப்பிடலாம் ஆனால் குழம்பில் கிழங்கு மற்றும் காய்கறிக்கு பதிலாக காராமணி, சுண்டல் கடலை போன்றவற்றைச் சேர்க்கலாம்
காய்கறிகளில் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய் என தண்ணீர்ச்சத்து நிறைந்தவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
பழங்களில் கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், பேரிக்காய், அத்தி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, நாவல் போன்றவற்றை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு போன்ற பயறு வகைகளை சுண்டலாக வேகவைத்து சாப்பிடலாம்.
எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தவிட்டு எண்ணெய், சோள எண்ணெய், சோயா எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
மீன் வகைகளில் மத்தி, சங்கரா, கானாங்கெழுத்தி, அயிரை போன்ற மீன் வகைகளை குழம்பாகச் சமைத்துச் சாப்பிடலாம். இவற்றில் ஒமேகா 3 உள்ளதால், இதய நோயாளிகளுக்கு ஏற்றவை. சைவம் சாப்பிடுபவர்கள் ஒமேகா 3-யின் தேவைக்கு வால்நட் மற்றும் ஆளி விதையைச் சாப்பிடலாம்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு!
டாப் 10 செய்திகள்: புத்தாண்டு கொண்டாட்டம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் வரை!
நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?
பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!
ஹெல்த் டிப்ஸ்: கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது எப்படி?