சாப்பாட்டுல அடிச்சுக்க முடியாத நகரங்கள் பட்டியல்… சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Published On:

| By Minnambalam Login1

உலகில் மிகச்சிறந்த நாட்டு உணவுகள் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த உணவு வகைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் கீரிஸ் உணவு வகைகள் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இத்தாலி பெற்றுள்ளது.

மெக்சிகன் , ஸ்பானீஷ், போர்ச்சுகீஸ், டர்கிஸ் ,இந்தோனேஷியன், பிரெஞ்ச், உணவு வகைகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சிறந்த உணவு வகைகள் பட்டியலில் இந்தியா உணவு வகைக்கு 12 வது இடம் கிடைத்துள்ளது.

உலகின் மிகச்சிறந்த உணவு வகைகள் கிடைக்கும் முதல் நான்கு நகரங்கள் இத்தாலியில்தான் உள்ளன. அவை, நேப்பிள்ஸ், மிலன், போல்க்னா, புளோரன்ஸ் நகரங்கள். சிறந்த உணவுகள் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் உலகளவில் மும்பைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. மும்பையின் அடையாளங்கள் என வடபாவ், பேல்பூரி, பாவ்பாஜி குறிப்பிடப்பபட்டுள்ளது. ராம் அஸ்ரயா, மும்பையில் தென்னிந்திய உணவுக்கு பெயர் பெற்ற கஃபே மெட்ராஸ் , ஸ்ரீ தாக்கர் போஜானலயா போன்றவை மிகச்சிறந்த உணவங்கள் என்றும் டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.

சிறந்த இந்திய உணவுகள் கிடைக்கும் உலகின் 100 நகரங்களில் அம்ரிஸ்டர் 43, டெல்லி 45, ஹைதரபாத் 50, கொல்கத்தா 71, சென்னை 75வது இடங்களில் உள்ளன. பஞ்சாபி உணவு வகைகள் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவாக டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 17, 073 நகரங்களில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 15,478 உணவு வகைகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பூண்டி ஏரியில் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

சென்னையில் விட்டு விட்டு கனமழை : 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share