‘பென்ஸ்’… ரவுடி லுக்கில் நிவின் பாலி

Published On:

| By uthay Padagalingam

Benz movie nivin pauly looks like rowdy

’உன்னை எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் ரக்டு பாயா தெரியலையே’ என்று ‘கமெண்ட்’ அடிக்கிற வகையில் சிலரது தோற்றம் இருக்கும்.

நாயகர் நடிகர்களிலும் அப்படிச் சிலர் உண்டு. அவர்களே தங்களது லுக்கை மாற்றிக்கொண்டு திரையில் ‘டெரர்’ ஆக உலவியிருக்கின்றனர்.

ADVERTISEMENT

‘அலைபாயுதே’, ‘ரன்’ படங்களில் சாக்லேட் பாயாக தோன்றிய மாதவன் ‘ஆயுத எழுத்து’வில் ரவுடியாக தோன்ற நிறைய மெனக்கெட்டிருந்தார்.

உடல்மொழி, பார்வை, இயல்பான பாவனைகள் என அனைத்திலும் மாற்றத்தைக் கொணர்ந்திருந்தார். அதே போன்ற முயற்சியை, அதற்கு முன்னரே ‘தீனா’வில் அஜித் செய்திருந்தார். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு.

ADVERTISEMENT
Benz movie nivin pauly looks like rowdy

அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. ‘பென்ஸ்’ படத்தில் அவர் நடிக்கிறார் என்ற தகவல் நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அவரது பாத்திரப் பெயர் வால்டர்.

பாக்கியராஜ் கண்ணன் எழுதி இயக்கும் இந்த படத்தின் மூலக்கதைக்குச் சொந்தக்காரர் லோகேஷ் கனகராஜ். இதில் ராகவா லாரன்ஸ் உடன் மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

பெண் ஷோகேஸ் பொம்மைகளூடே ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்வதாக, நிவின் பாத்திரத்தின் அறிமுகம் காட்டப்பட்டிருக்கிறது. இதில் அவர் ‘வில்லன்’ என்று புலனாகிற வகையில் அது அமைந்திருக்கிறது. படம் வெளிவந்தபிறகு, மிச்ச சொச்சம் தெரிந்துவிடும்.

உடல் முழுக்க நகைகளுடன் நிவின் பாலி தோன்றியிருப்பது சில ரவுடிகளை நமக்கு நினைவூட்டக்கூடியது. ‘காப்பிரைட்’ பிரச்சனைகளைக் கிளப்பக்கூடியது.

‘பென்ஸ்’ டீம் அதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை இனிவரும் நாட்களில் காண நேரிடலாம்..! Benz movie nivin pauly looks like rowdy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share