நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2023 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை தாக்கியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
இதனை அடுத்து இஸ்ரேல் ஹமாஸை அழிப்பதற்காக பாலஸ்தீனத்தை தாக்க தொடங்கியது. அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடங்கிய போர் இன்று வரை தொடர்கிறது.
இந்த போரில் சுமார் 44,757 பாலஸ்தீனியர்களும், 1,139 இஸ்ரேலியர்களும் இது வரை கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளது மட்டுமல்லாமல் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இதற்கிடையில் போரை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர் குற்றங்கள் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், மற்றும் ஹமாஸ் தலைவர் மொஹம்மத் டெயிஃப் ஆகியோருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த மூன்று பேர் தங்களது நாட்டை விட்டு வெளியே சென்றால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் கஸ்தூரி
’பாலிவுட் படங்கள் போர் அடிக்கின்றன…!’ – இயக்குநர் பால்கி
தமிழ்நாடு மின்சார வாரியம் – அதானி நிறுவனம் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை: செந்தில் பாலாஜி
Comments are closed.