‘ஃபெங்கல்’ புயல் இன்று உருவாகிறது… வானிலை மையம் அலர்ட்!

Published On:

| By Selvam

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்தநிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 27) புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையில் இருந்து 190 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 580 கி.மீ தொலைவிலும்,  சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாக வாய்ப்புள்ளது. புயலாக மாறிய பின் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு அசைவுகளையும் வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இந்த புயல் உருவானால் அதற்கு சவுதி அரேபியா வழங்கியுள்ள ‘ஃபெங்கல்’ என்ற பெயர் வழங்கப்படும்.

கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தத்துவம் இல்லாத தலைவர்கள்… ‘விடுதலை 2’ பேசும் அரசியல்!

டாப் 10 நியூஸ்: குடியரசு தலைவர் தமிழகம் வருகை முதல் உதயநிதி பிறந்தநாள் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share