பியூட்டி டிப்ஸ்: அழகுக்கு அழகூட்டுமா விர்ஜின் கோகனட் ஆயில்?

Published On:

| By Selvam

Benefits of Virgin coconut oil

தேங்காய் எண்ணெய் பற்றி பேசும்போதெல்லாம் இப்போது ‘விர்ஜின் கோகனட் ஆயில்’ (Virgin coconut oil) பற்றியும் பேசுகிறோம்.

அதென்ன தேங்காய் எண்ணெயில் விர்ஜின் என்று நினைக்கலாம். வழக்கமான தேங்காய் எண்ணெயில் இருந்து எந்தவிதத்தில் வித்தியாசப்படும் என்றும் தோன்றலாம்.

ADVERTISEMENT

வழக்கமான தேங்காய் எண்ணெயானது, உடைத்து காயவைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால், விர்ஜின் கோகனட் ஆயில் பச்சை தேங்காயிலிருந்து Heat process செய்யாமல் தயாரிக்கப்படுகிறது. இதையே Cold Pressed Technology என்கிறார்கள்.

இதனால் விர்ஜின் கோகனட் ஆயிலில் தேங்காயின் வாசமும், ஊட்டச்சத்துகளும் முழுமையாக இருக்கும்.

ADVERTISEMENT

வழக்கமான முறையில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் டிரான்ஸ்ஃபேட் (Trans fat) என்கிற கெட்ட கொழுப்பு உருவாகியிருக்கும். விர்ஜின் ஆயில் சூடுபடுத்தப்படாததால் கெட்ட கொழுப்பு இருக்காது.

கிருமித் தொற்றிலிருந்து கைகளை சுத்தமாகப் பராமரிக்க ஆல்கஹால் கலந்த சானிட்டைஸர்களை பயன்படுத்துகிறோம். தொடர்ச்சியான ஆல்கஹால் சானிட்டைஸர்களின் பயன்பாடு நம் கைகளை வறட்சியாக்குவதுடன், சரும அலர்ஜியையும் உண்டாக்கிவிடலாம்.

ADVERTISEMENT

அதற்கு பதிலாக VCO என்கிற விர்ஜின் ரக தேங்காய் எண்ணெயினை சானிட்டைஸர் போல கைகளில் தேய்த்துக்கொள்வது கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று 2021-ம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு தெறிவிக்கிறது.

இதனாலேயே விர்ஜின் தேங்காய் எண்ணெயை இயற்கை கிருமி நாசினி (Natural Prophylactic) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

“இந்த  விர்ஜின் கோகனட் ஆயிலை சருமநல மருத்துவர் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு கூந்தல் ஆரோக்கியத்தைப் போல சருமத்துக்கும் நலம் பயக்கிறது. இதனால்தான் அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பில் தேங்காய் முக்கிய இடம்பிடித்துள்ளது.

சருமத்துக்கு இயற்கையான மாயிஸ்ச்சரைசராக செயல்பட்டு பொலிவைக் கொடுக்கும் தன்மையும் இந்த தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. எனவே,  விர்ஜின் கோகனட் ஆயில்  அழகுக்கு அழகூட்டும் ” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மில்லட் பொரிவிளங்காய் உருண்டை

விடைபெற்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா

சிதம்பரம் கோவில் கிரிக்கெட் பிரச்சனை… தீட்சிதர் விளக்கம்!

’‘அனிமல் ‘ படத்தால் நிறைய அழுதேன் ‘ : நடிகை திருப்தி டிமிரி

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!

’ஒரு நிமிடத்தால் விருது பறிபோனது ‘ – ஏ.ஆர்.ரகுமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share