இதயம் முதல் சரும ஆரோக்கியம் வரை : கேரட் ஜூஸ் குடிப்பதால் இவ்ளோ நன்மைகளா?

Published On:

| By Santhosh Raj Saravanan

benefits of drinking carrot juice daily

கேரட் ஜூஸ் தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம்

தினமும் நல்ல ஓய்வும், உடற்பயிற்சியும், நல்ல உணவும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களை நமது அன்றாட உணவுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக காய்கறிகள், பழங்களில் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சத்துக்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் கேரட் நமக்கு எளிமையாக கிடைக்கின்ற ஒரு காய்கறியாக உள்ளது.

ADVERTISEMENT

தினமும் கேரட் ஜூஸ் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கேரட்டில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. கேரட் ஜூஸ் ஏற்படுத்தும் ஏழு நன்மைகளை விரிவாகப் பார்க்கலாம்.

ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது

ADVERTISEMENT

கேரட்டில் பி-கரோட்டின், ஏ-கரோட்டின் உள்ளிட்ட கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. கேரட் ஜூஸ் குடிப்பது உங்கள் உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது. செல்களை சேதப்படுத்தும், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

உடலில் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது

ADVERTISEMENT

கேரட் ஜூஸ் கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை குறிக்கும் மாலோண்டியல்டிஹைடை குறைக்க உதவி புரிகிறது. இதன் மூலம் உங்கள் இரத்த நாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன், இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கேரட் ஜூஸை தொடர்ந்து குடித்து வருவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உங்கள் இதயம் மிகவும் வலிமையாக செயல்பட உதவும். கேரட்டில் உள்ள பொட்டாசியம், நைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் இயக்கத்திற்கு உதவி புரிகின்றன. கேரட் ஜூஸ் நாள்தோறும் குடித்துவர உங்கள் சரும ஆரோக்கியம் கூடும்.

உணவில் சேர்த்துக்கொள்ள எளிதானது

சப்ளிமெண்ட்களைப் போலன்றி, கேரட் ஜூஸ் இயற்கையானது மற்றும் உங்கள் காலை உணவில் சேர்க்க எளிதானது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்வது கூடுதல் கலோரிகள் அல்லது ரசாயனங்கள் இல்லாமல் நல்ல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுகிறது

கேரட் ஜூஸ் மட்டும் அனைத்து உடல்நலப் பிரச்சினைகளையும் சரிசெய்யாது என்றாலும் அதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நன்மை பயக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், உடல் இயக்க ஆற்றலை அதிகரிக்கவும், நீண்டகால இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைச் சேர்க்க கேரட் ஜூஸ் ஒரு எளிமையான வழியாக உள்ளது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதுடன் கேரட் ஜூஸும் எடுத்துக்கொண்டால் நல்ல ரிசல்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share