தென்காசி மாவட்டம் புளியரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்றல் தவழும் தென்காசியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசனுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சுற்றுலாவிற்கு வருவது வாடிக்கை.
இந்தாண்டு சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகளின் அதிக வருகையை முன்னிட்டு தென்காசி பகுதிகளில் கழுதை பால் வியாபாரிகள் முகாமிட்டு விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தென்காசி சுற்றுவட்டார பகுதி மற்றும் புளியரை சுற்றுவட்டார பகுதிகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கழுதை மேய்க்கும் தொழிலாளிகள் பலர் முகாமிட்டு கழுதை பாலை விற்பனை செய்து வருகிறார்கள்.
கழுதை பாலின் பயன்கள் என்ன ?
கழுதைப் பாலில் உள்ள இம்யூனோகுளோபுலின் உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்திக்காக சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
தென்காசி பகுதிகளில் விற்கப்படும் இந்த கழுதை பால் ஒரு சங்கு நூறு ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கழுதை பாலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரசின் சரியான விகிதம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதிக அளவில் கால்சியம் இருந்தால் அது மலச்சிக்கல் மற்றும் பசியின்மையை ஏற்படுத்துகிறது.
இந்த கழுதைப் பாலில் 100 கிராமுக்கு 68.9 மில்லிகிராம் கால்சியமும், 41 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. இது மாட்டுப் பாலை விட குறைவானது என்கின்றனர் தொழிலாளிகள்.
கழுதை பாலில் உள்ள சக்தி தாய்ப்பால் அளவிற்கு நன்மை இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு சீர் தட்டுதல், இளைப்பு நோய் போன்றவற்றிற்கு இந்த கழுதை பாலை சிறந்த மருத்துவ குணம் கொண்ட பாலாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
சிறு வயதிலேயே சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை ஏற்படுவது சகஜம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இந்த கழுதைப்பால் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கழுதை பாலில் உள்ள பயன்கள்
இது பசுவின் பாலை விட கணிசமாக குறைந்த கொழுப்பு, அதிக தாதுக்கள் மற்றும் அதிக லாக்டோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கழுதைப்பாலில் அதிக வைட்டமின், தாது மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் இருப்பதால் சருமத்திற்கும் நல்லது.
வரலாற்று ரீதியாக, கிளியோபாட்ரா இந்த ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை அவரது தோல் பராமரிப்பு நன்மைகளுக்காக பயன்படுத்தியுள்ளார். ஏனெனில் இது அற்புதமான புத்துணர்ச்சியூட்டும் குணங்களைக் கொண்டுள்ளது.
இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு கலவைகளைக் கொண்டுள்ளது. மேலும் இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
இத்தனை சிறப்பம்சங்கள் வாய்ந்த கழுதை பால் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சரவணன்
தைரியம் இருந்தால்… ராகுல்காந்தியிடம் கேள்விகளை அடுக்கிய ஸ்மிருதி இராணி
