ADVERTISEMENT

வேர்க்கடலை வெண்ணெய்யை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் பாருங்க!

Published On:

| By Pandeeswari Gurusamy

benefits and disadvantages of peanut butter

பெரும்பாலான குழந்தைகள் வேர்க்கடலை வெண்ணெய்யை (Peanut Butter) விரும்பி உண்கின்றனர். பொதுவாக அவசர அவசரமாக காலையில் பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளுக்கு இந்த வேர்க்கடலை வெண்ணெயை பிரட்டில் சேர்த்து கொடுப்பது தாய்மார்களுக்கு மிகவும் வசதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை கொடுத்து விட்டால் பல பெற்றோர் குழந்தைகளுக்கு போதுமான உணவு கொடுத்து விட்டதாக நம்புகிறார்கள்.

பெரியவர்களும் காலை பரபரப்பில் சில நேரங்களில் அதையே சாப்பிடு விட்டு கிளம்புகின்றனர். பலர் அடிக்கடி அல்லது தினமும் எடுத்துகொள்கின்றனர். குறிப்பாக இந்தியாவை விட அமெரிக்காவில் தினமும் வேர்க்கடலை வெண்ணெய் எடுத்துக்கொள்பவர்கள் அதிகம் உள்ளனர். National Peanut Board கூற்றுப்படி அமெரிக்காவில் 94 சதவிகித குடும்பங்கள் வேர்க்கடலை வெண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

உண்மையில் தினமும் வேர்க்கடலை வெண்ணெய் உட்கொள்வதால் நமது உடலில் என்ன நடக்கும். அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.


வேர்க்கடலை வெண்ணெய் எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.

ADVERTISEMENT

வேர்க்கடலை வெண்ணெய்யில் உள்ள மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. மேலும் விட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் என ஹெல்த்.காம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்யின் நன்மைகள்

இதுகுறித்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிபுணரும், Safe and Simple Food Allergy Prevention என்ற இதழின் ஆசிரியருமான மலிகா மல்கானி, வேர்கடலை வெண்ணெய் நமது உடலில் தசை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது என்கிறார். மேலும் வேர்க்கடலை வெண்ணெய் புரதச்சத்து நிறைந்த உணவு. ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய்யில் 7 கிராம் புரதச்சத்தை வழங்குகிறது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 14 சதவிகிதம் என்கிறார்.

ADVERTISEMENT

எடை பராமரிப்பு

மேலும் 2 தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய்யில் 16 கிராம் கொழுப்பு உள்ளதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உடல் எடை பராமரிப்பில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2022ல் நடந்த ஆய்வில் உடலில் வேர்க்கடலை சேர்த்தவர்கள் சேர்க்காதவர்களை விட 7 பவுண்ட் குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.

இதய ஆரோக்கியம்

வேர்க்கடலையில் மோனோசேச்சரேட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது HDL கொழுப்பை அதிகரிக்கவும் LDL கொழுப்பை குறைக்கவும் உதவதால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என மல்கானி தெரிவித்துள்ளார். ஆய்வு ஒன்றில் 6 மாதங்கள் வரை வேர்க்கடலை எடுத்து கொண்டவர்களுக்கு சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

தீமைகள்

வேர்க்கடலை வெண்ணெய் உடலுக்கு பல நன்மைகளை தரும் என்றாலும் 2 தேக்கரண்டி வேர்க்கடலை வெண்ணெய்யில் சுமார் 190 கலோரிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் அதிகப்படியாக வேர்க்கடலை வெண்ணெய் எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு என்பதற்கு ஏற்ற வகையில் எப்போதும் மிதமான அளவில் வேர்க்கடலை வெண்ணெய் உட்கொள்வது நல்லது. பொதுவாக சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் வேர்க்கடலை வெண்ணெய் எடுத்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share