சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்கு முன்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில். தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்க இருப்பதை உறுதி செய்ததோடு, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக இருந்த அண்ணாமலை பாராட்டத் தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் மகத்தானது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். before meeting Edappadi…. New post for Annamalai: Amit Shah information
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி,. அதன் பின் புறப்பட்டு ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தார். Before meeting Edappadi…. New post for Annamalai: Amit Shah information
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யும் நிமிடத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.