ADVERTISEMENT

பெயரை மாற்றிய பீலா ராஜேஷ்: என்ன காரணம்?

Published On:

| By Selvam

தமிழக அரசின் எரிசக்திதுறை செயலாளரான பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக பத்திரிகைகளில் விளம்பர செய்தி வெளியிட்டுள்ளார்.

பெயர் மாற்றம் தொடர்பாக வெளியான பத்திரிகை விளம்பர செய்தியில், “வெங்கடேசன், எண் 19, ராஜா தெரு, கல்யாணி நகர், கொட்டிவாக்கம், சென்னை – 600041 முகவரியில் வசிக்கும் டாக்டர். பீலா ராஜேஷ் ஆகிய நான் எனது பெயரை டாக்டர்.பீலா ராஜேஷ் என்பதிலிருந்து டாக்டர்.பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளேன்.  இனிவரும் காலங்களில் எனது பெயர் டாக்டர்.பீலா வெங்கடேசன் என்று மட்டுமே அறியப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பீலா ராஜேஷின் கணவரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து ராஜேஸ் தாஸ்க்கு தமிழக அரசு கட்டாய ஓய்வை அறிவித்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே பீலா ராஜேஷ் மற்றும் அவரது கணவர் ராஜேஷ் தாஸ் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்தசூழலில், பீலா ராஜேஷ் தனது கணவர் ராஜேஷ் தாஸ் பெயருக்கு பதிலாக தந்தை வெங்கடேசன் பெயரை பின்னால் சேர்த்துள்ளார். அதேபோல, அவரது பெயர் பீலா வெங்கடேசன் என்று கெசட்டிலும் மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பொன்முடி வழக்கில் தேவையற்ற கருத்துக்களை நீக்குக: ஓய்வுபெற்ற நீதிபதி வசந்த லீலா

“ஒவ்வொரு ஆண்டும் இப்படிதான்” : வெள்ளத்தில் தத்தளித்த சென்னை – காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share