அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் சுலபமாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து நம் உடல் அழகை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
வெந்தயத்தை இரவே ஊறவைத்து மறுநாள் அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு குளித்தால், கூந்தல் பளபளப்பாக இருக்கும். உடலும் குளிர்ச்சியாகும்.
ஒரு கப் பாசிப்பருப்புத் தூள், நான்கு டீஸ்பூன் மஞ்சள் தூள், நான்கு டீஸ்பூன் சந்தனத்தூள்… இவற்றை நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் சேர்க்கவும். இதை குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து குளித்தால் சோப்பு தேவையில்லை. உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதோடு உடலும் மின்னும்.
துளசி, சந்தனம், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்து உடலில் பூசி வர… வேனல் கட்டிகள் மறையும் ;சருமம் மிருதுவாகும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு கலந்து உடம்புக்குத் தடவி பிறகு பயத்த மாவு தேய்த்து குளித்தால் உடம்பு பளபளப்பாகவும் மிருதுவாகவும் சுருக்கங்கள் இல்லாமல் வேர்க்குரு தொல்லை இல்லாமல் இருக்கும்.
செம்பருத்தி இலையை பறித்து நன்கு அலசி துடைத்து ஷாம்பூ போல நைசாக அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு குளித்தால் கோடையில் தலை சூடு ஏற்பட்டால் தணிந்து விடும்.
அரைத்த சந்தனத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து அதை வெதுவெதுப்பான நிலையில் உடலில் தேய்த்துக் கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தால் மேனி பளபளக்கும். கோடை வெப்பத்திற்கு குளுகுளுவென்று இருக்கும்.
தர்ப்பூசணி பழத்தின் சதையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சோப்பு போடாமல் குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்துக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Mother’s day 2024: உலகத்திற்கு ஒளியூட்டிய தாயின் பாசம்!
சண்டே ஸ்பெஷல்: சுயமாக டயட் இருக்கிறீர்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!