ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.
குறிப்பாக, நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது. அந்த வகையில் முடி உதிர்வைத் தடுக்க இந்த உணவுகள் உதவும்.
முட்டை, மட்டன் சூப், முருங்கைக் கீரை, பச்சை நிற சட்னி வகைகள், கீரைகள், நெல்லிக்காய், வேர்க்கடலை, முந்திரி, எள், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பேரீச்சம்பழம், வெந்தயம், பால் பொருள்கள், அனைத்து வகை பருப்புகள், முளைகட்டிய பச்சை தானியங்கள் (ஒருநாளைக்கு ஐந்து டீஸ்பூன் போதுமானது).
முழு தானியங்களில் பி காம்ப்ளெக்ஸ் சத்து நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். தினமும் ஒரு சிறிய கப் அளவுக்குக் கறுப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசியில் ஒன்றைச் சேர்த்துக்கொள்ளவும். பாலிஷ் செய்யப்படாத அவற்றில் பி காம்ப்ளெக்ஸ் சத்தும், தாதுக்கள், கால்சியம், இரும்பு, ஒமேகா 3, பயோட்டின் போன்றவை இருக்கும். அனைத்துமே முடி வளர்ச்சிக்கு உதவுபவை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: தினமும் பிரெட் சாப்பிடுபவரா நீங்கள்… உடல் எடை அதிகரிக்கலாம்!
டாப் 10 நியூஸ் : கனமழை எச்சரிக்கை முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் வரை!
