பியூட்டி டிப்ஸ்… பருக்களைக் குறைக்க உணவுகள் உதவுமா?

Published On:

| By Selvam

Can Foods Help Reduce Pimples?

முகத்தில் பருக்கள் அதிகமுள்ளவர்கள் பலவித மருந்துகள் உபயோகித்தும், சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவுப் பழக்கத்தில் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் நிச்சயம் பலன் அளிக்கும் என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

மேலும், “பால் பொருள்கள், குளுட்டன் உணவுகள், வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு மாதத்துக்கு முழுமையாகத் தவிர்த்துப் பாருங்கள். குளுட்டன் என்பது ஒருவகையான புரதம்.

அது கோதுமை, பார்லி, குஸ்குஸ் (Couscous) என்ற தானியம் போன்றவற்றில் அதிகமிருக்கும். எனவே காக்ரா, பிஸ்கட் உள்ளிட்ட கோதுமை உணவுகள், பால் சேர்த்த உணவுகள், மால்ட் சேர்த்த பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும்.

மில்க் சாலிட் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தப் பொருளையும் தவிர்க்க வேண்டும். கடலை மிட்டாய் சாப்பிட வேண்டாம். தயிர், மோர் இரண்டையும் தவிர்க்கவே கூடாது. இந்த உணவுப்பழக்கத்தை ஒரு மாதத்துக்குப் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம் பருக்கள் குறையும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை மினி அடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share