பியூட்டி டிப்ஸ்: எல்லா காலத்துக்கும் ஏற்றதா லிப் பாம்?

Published On:

| By christopher

பொதுவாக குளிர்காலத்தில்தான் உதடுகள் வறட்சி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால், கோடைக்காலத்துக்கும் ஏற்றதா லிப் பாம் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும்.

“கோடைக்காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும் லிப் பாம் பெரிதும் உதவும்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். “குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடைக்காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பாம் பயன்படுத்தலாம். ஆனால், கோடைக்காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக் கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது” என்கிறார்கள்.

ADVERTISEMENT

கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இவை சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் உதவும். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும்போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில்தான். எனவே, உதடுகள் வறட்சி அடையாமலும், கருமை ஆகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.

சூரிய வெப்பக் காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது. வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால்தான் என்று இளமையாக இருக்க முடியும். மேலும், உதடுகளின் பராமரிப்பில் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதும் மிகவும் அவசியம்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : சுங்க கட்டணம் உயர்வு முதல் டி20 உலகக்கோப்பை வரை!

ADVERTISEMENT

சண்டே ஸ்பெஷல்: மாம்பழம்…. யார்… யார், எந்த அளவு, எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share