பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், இலக்கிய வட்டாரங்களுக்கு மிகவும் பரிச்சயமான நபரான பவா செல்லத்துரை பங்கேற்றிருந்தார். முதல் வாரத்தில் நிகழ்ச்சியில் குறைவான ஈடுபாடு கொண்ட ஆறு பேர்களில் ஒருவராக ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு பவா சென்றார்.
இரண்டாவது வாரமும் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு செல்லும் லிஸ்டில் பவா இடம்பெற்றிருந்தார். ஆனால் நேற்று நடந்த எபிசோடில் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு செல்ல பவா மறுத்து விட்டார்.
“நான் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு மீண்டும் போகல…எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு… கன்ஃபெஷன் ரூமுக்கு நேரடியா வந்துடறேன்…ப்ளீஸ் என்னை கூப்பிடுங்க” என்று பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தார்.
உடனே கன்ஃபெஷன் ரூமுக்கு பவா செல்லத்துரையை பிக் பாஸ் அழைத்தார்.
“ஒருவேளை அனன்யாவை அனுப்பியதற்கு பதிலாக என்னை கமல் சார் அனுப்பியிருந்தால் நான் சந்தோஷமாக போயிருப்பேன்” என்று பிக் பாஸிடம் பவா சொல்ல,
உடனே பிக்பாஸ், “மக்களுக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கு. அதனால் தான் உங்கள இந்த வீட்ல வச்சிருக்காங்க” என்று ஆறுதலாக பேசினார்.
“நீங்க என்ன கன்வின்ஸ் பண்ணல… என்னால இதுக்கு மேல ஒரு மணி நேரம் கூட இங்க இருக்க முடியாது மன்னிச்சிருங்க…
உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் தொய்வா உணர்கிறேன்… பிளீஸ் என்னை தயவு செஞ்சு அனுப்பிருங்க பிக் பாஸ்” என்று பவா உடைந்த குரலுடன் பேசினார்.
அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு பவா, பிக் பாஸ் மிரர் முன்பாக சென்று, “பிக்பாஸ் நான் நேற்று நைட் முழுக்க தூங்கல…தயவுசெஞ்சு கன்ஃபெஷன் ரூமுக்கு என்னை அழைத்து வீட்டுக்கு அனுப்பிருங்க” என்றார்.
பின்னர் சில நிமிடங்களில் “பிக் பாஸ் எனக்கு லோ சுகர் ஆகுது. இங்க டீ காபி இல்லை. சூட் கேஸ்ல துணி எல்லாம் எடுத்து வச்சிட்டேன். என்னை தயவு செஞ்சு அனுப்புங்க” என்று மறுபடியும் கோரிக்கை வைத்தார்.
காலை 10.50 மணிக்கு “பவா வாங்க” என்று பிக் பாஸ் அழைத்தார்.
“நேற்று எடுத்த முடிவு தான் பிக் பாஸ். என்னால நார்மலா இருக்க முடியவில்லை. நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கு” என்று கூறினார்.
“உங்கள் உடல்நிலை மனநிலை இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த வீட்டிலிருந்து வெளியேற்றுகிறேன்…டேக் கேர்” என்று பவா செல்லத்துரையை பிக் பாஸ் அனுப்பி வைத்தார்.
தனது தனித்துவமான கதை சொல்லல் முறையால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா!